இந்த போட்டியால் அவள் பயிற்சியளிக்கப்பட்டாள். அதே வேளையில், அவருடைய திறன் வெளஇக்காட்டப்பட்டது என்றார் அவர்.
இந்த சிறிய மாடல் அழகி போட்டிக்கு, சீன ஆடை வடிவமைப்பு, சீன பணிச் சீருடை ஆடை மாடல் கமிட்டி ஆகிய வாரியங்கள் ஏற்பாடு செய்தன. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு ஒரு முறை இப்போட்டி நடைபெறுகின்றது. இவ்வளவு முக்கிய நிலை போட்டியில் நல்ல வெற்றி பெற்றதால், குவேயாவின் முழுக் குடும்பத்தினரும், மகழ்ச்சியடைந்தனர்.
உயரமான உடல்வாகு கொண்ட குவேயா, சிறிய வயதில், அழகியாக மாற விரும்பினார். தொலைக்காட்சியில் மாடல் அழகிக் காட்சி கண்ட போது, எதிர்காலத்தில் தாம் ஒளியில் ஃபேஷன் அரங்கில் நடந்து, ஒரு மாடல் அழகியாக மாற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். பெற்றோரின் ஆதரவுடன், 14வயதான குவேயா, சிச்சியாங்கின் ஒரு சிறப்பான மாடல் கூட்டு நிறுவனத்தில் பயிற்சி பெறத் துவங்கினார். தாய் ஹர்குலி கூறியதாவது
சிறு வயதில் அவர் என்னுடைய ஆடை அணிந்து, மாடல் அழகி போல நடந்தார். அவருக்கு இந்தத் துறையில் திறமை உண்டு என்று நான் உணர்ந்தேன். அவர் வளர்ந்து வரும் போக்கில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் வகையில் மாடல் கூட்டு நிறுவனத்துக்கு அவரை அனுப்பினேன் என்றார் அவர்.
சிறப்பு மாடல் கூட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அவர், வெகுவேகமாக முன்னேற்றம் அடைந்தார். இந்த வாய்ப்பு மூலம், முழு நாட்டின் போட்டியில் கலந்து கொள்வது அவருக்கு மிக அரிய வாய்ப்பாகும். போட்டிக்கு முன், அவர், தமது பெற்றோருடன் பல்வேறு ஆயத்த பணிகளை நன்றாக மேற்கொண்டார். முயற்சிகள், பெற்றோர் ஆதரவு, ஆகியவற்றால் அவருடைய கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. குவேயா கூறியதாவது
1 2
|