
பரிசு பெற்றதில் மகிழ்ச்சியடைந்தேன். முதலில் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மாடல் அழகி பயிற்சி பெறத் துவங்கிய பின், அவர்கள் எனக்கு பெரும் ஆதரவு அளித்தனர். அவர்களுடைய முழுமையான ஆதரவு இல்லாதிருந்தால், அரங்கில் தன்னம்பிக்கையும், எளிமையான உணர்வும் எனக்கு இருந்திருக்காது. என்னுடைய சாதனை, அவர்களுடைய முயற்சியுடன் நெருங்கி தொடர்புடையது என்றார் அவர்.
குவேயாவின் பள்ளியும் அவருக்கு முழுமையான ஆதரவு அளித்தது. வெளியேசென்று போட்டியில் கலந்துக் கொண்டதால், சில அறிவியல் பாடங்களை அவர் இழந்தார். ஆசிரியர்கள், ஓய்வு நேரத்தில் அவருக்கு பாடம் கற்பித்தனர். குவேயாவுக்கு அழகி மாடல் பணி பிடிப்பது மட்டுமல்ல, அதில் அவருக்கு மேம்பாடும் இருக்கிறது. ஆசிரியர்கள் இத்தகைய மாணவியால் மகழ்ச்சியடைந்தனர். பள்ளியின் தலைவர் சேங் தௌ கூறியதாவது மாணவர்களின், முழுமையான வளர்ச்சிக்கு நமது பள்ளி ஊக்கம் அளிக்கிறது. மாணவி குவேயா, இந்தத் துறையில் தனிச்சிறப்பான மேம்பாடு தொண்டிருந்ததால் பள்ளியின் தலைவர்கள், அதை வளர்ப்பதற்கு கவனம் செலுத்தினர், அவர் சில போட்டிகளிலும், பயிற்சிகளிலும், சில சமூக நடவடிக்கைகளிலும் கலந்துக் கொள்வதற்கு பள்ளி, ஆதரவும் ஊக்கமும் அளிக்கிறது என்றார் அவர்.
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, குவேயா வாசித்த பியானோ இசைவாகும். குவேயா, பியானோ இசைக்கும் வழக்கத்தில் ஈடுபட பாடுபடுகிறார். இந்த போட்டி மூலம், 14வயதான குவேயா, பயிற்சி பெற்று, மாடல் துறையில் தமக்கான சிறிய இடத்தை பெற்றார். இப்போது அவர், பள்ளிக்குத் திரும்பியுள்ளார். கல்வி கற்றுக் கொண்டு, சொந்த அறிவு தரம் உயர்த்துவது என்பது அவருடைய வாழ்க்கையின் முதலாவது முக்கிய திட்டமாகும் என்று குவேயா தெரிவித்தார். 1 2
|