• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-14 15:06:13    
நேயர்களின் கருத்துகள்

cri

க்ளீட்டஸ்: தஞ்சை திருவைகாவூர் நேயர் டி. எம். முருகானந்தம் எழுதியது. தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு மேலும் பலருக்கு நமது வானொலியை அறிமுகப்படுத்தும் பணியை தொடர்ந்து வருகிறேன். அந்த வகையில் ஈரோட்டில் நடைபெற்ற நேயர் மன்றக் கருத்தரங்கு பற்றி தமிழக செய்தியேடுகளில் வெளிவந்த தகவல்களையும் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்தால் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி மு. மு. மபாஸ் எழுதிய கடிதம். உலகிலேயே நீளமான மெட்ரோ ரயில் பாதை சீனாவில் அமைக்கப்படவுள்ளது என்ற செய்தியை செய்தியேட்டில் பார்த்தேன். சீனா தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறது. அண்மையில் உலகில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான இடத்தில் சிங்காய் திபெத் ரயில் பாதையை அமைத்து சீனா எந்த ஒரு நாடும் செய்யாத ஒரு வலுவான சாதனையை நிகழ்த்தியது. சீனா சாதனை நாடாக மாறிவருவது மகிழ்ச்சிக்குரிய விடயமே என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து நெல்லை பத்தமடை கந்தசாமி எழுதிய கடிதம். 1970ம் ஆண்டு முதல் பல சர்வதேச வானொலிகளைக் கேட்டு வருகிறேன். சீன வானொலி, பிபிசி,வெரித்தாஸ், மற்றும் உள்நாட்டு ஒலிபரப்புகள், பண்பலை ஒலிபரப்பு என பல வானொலிகளைக் கேட்டு, நிகழ்ச்சிகள் பற்றிய நிறை குறைகளையும் எழுதி வருகிறேன். 1991ம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துரை சார்பில் நிகழ்ந்த வானொலி தொடர்பான கருத்தரங்கில் நானும், சீன வானொலி நிலையத்தைச் சேர்ந்த கலையரசி அவர்களும் கலந்துகொண்டது சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றி நீண்ட உரை நிகழ்த்தினார். இன்றும் அந்த நிகழ்வு மலரும் நினைவாய் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கலை: பத்தமடை கந்தசாமி அவர்களே, மலரும் நினைவுகளை எமக்கும் ஏற்படுத்திய உங்கள் கடிதம் கண்டு மகிழ்ந்தோம். எமது நிகழ்ச்சிகளை தொடர்ந்து செவிமடுத்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம். அடுத்து மும்பை சுகுமார் எழுதிய கடிதம். நவம்பர் 21ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் வறுமை ஒழிப்புத்திட்டம், சீன ஆசிரியரைக் கவர்ந்த இந்தியா ஆகியவை பற்றிய தகவல்களை கேட்டோம். உலக இஸ்லாமியர்களுக்கு மக்கா மதீனவைப்போல, பௌத்த சிந்தனையாளர்களுக்கு, இந்தியா உள்ளது. அதை சரியாக கவர்ந்து பயன்படுத்தினால் நாடும் மக்களும் பயன்பெறுவார்கள். மலர்சோலையில் இடம்பெற்ற சீனப் பசுந்தேயிலை, தீ விபத்தை ஏற்படுத்திய மீன் ஆகிய தகவல்கள் நன்று என்று எழுதியுள்ளார்.

1 2