• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-14 15:06:13    
நேயர்களின் கருத்துகள்

cri

க்ளீட்டஸ்: ச. பாலசந்தர் எழுதிய கடிதம். 22 வயதான பாலசந்தர் 10 வகுப்புக்கு பிறகு கல்வி தொடர வாய்ப்பில்லாததால் வேலைக்கு செல்ல ஆரம்பித்து இன்று தனது மற்ற சகோதரர்கள் கல்விக்காக உழைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டு வானொலி பெட்டியை திருகி பார்த்தபோது எதேச்சையாக சீன வானொலியை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், நிகழ்ச்சிகளை கேட்டபோது சுவையாக அமைந்த தகவல்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், அன்று முதல் தொடர்ந்து சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருவதாகவும் எழுதியுள்ளார். மிக நீண்ட தனது கடிதத்தில் தனது எண்ணங்களை அழகாக வார்த்தைகளாக்கி தனது ஆர்வத்தையும், அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கலை: அன்பர் பாலசந்தர் அவர்களே. சீன வானொலியின் நேயர் குடும்பத்தில் இணைந்துள்ள உங்கள் அன்பும், ஆர்வமும் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். எமது நிகழ்ச்சிகள் நேயர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என்பதை கடிதங்கள் வாயிலாக அறியும்போது உற்சாகம் பிறக்கிறது.
அடுத்து தலைநாயர் பரசலூர் பி. எஸ். சேகர் எழுதிய நவம்பர் 22ம் நாள் ஒலிபரப்பான நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிய கடிதம். ஒவ்வொரு வீட்டிலும் பொதுவாக வைத்திருக்கவேண்டிய மருந்துப் பொருட்கள் பற்றியும், நகர மக்கள் இந்த மருந்துகளை அதிக அளவில் வாங்க வேண்டியதில்லை, வீட்டின் அருகிலேயே இம்மருந்துகள் கிடைக்கும் என்றும் கூறியது நல்ல அறிவுரை. தேவையான மருந்தை தேவையான நேரத்தில் வாங்குவதே நல்லது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து மணமேடு தேவராஜ எழுதிய நவம்பர் 28ம் நாள் ஒலிபரப்பான சீனப் பண்னாடு நிகழ்ச்சி பற்றிய கடிதம். பேச்சோடு பேச்சாக என்ற தலைப்பில் சீன பழமொழித் தொடரை ராஜாராம் அவர்கள் வழங்கினார். இன்பம், துன்பம், நட்பு, பொறாமை, மகிழ்ச்சி ஆகியவை தொடர்பான பழமொழிகளும், இதர நாட்டு மக்களின் பழமிழிகளும் ஒத்த கருத்துடையவையே. நாடுகள், மொழிகள், மதங்கள் வேறுபட்டிருப்பினும் பழமொழிகள் மனிதர்களின் இயல்பை, வாழ்க்கையை பிரதிபலிப்பதால் ஒத்தவையாக அமைந்துள்ளன என்று கருதுகிறேன். நாய் பற்றிய சீனர்களின் கருத்து வியப்பூட்டுவதாக இருந்தது என்று எழுதியுள்ளார்.


1 2