• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-14 15:32:32    
விவாக ரத்து 5

cri

"நீங்க ரெண்டு பேருதான் வந்திருக்கீங்களா?"

"ஆமா, ரெண்டு பேருதான்."

"உன் பசங்க ஒருதி தருத்தரும் வரலையே ஏன்?"

"அவங்களுக்கு நேரம் இல்லே."

"வருசப் பிறப்பன்னிக்கு உன்னை தொந்தரவு பண்ணியிருக்கக் கூடாது. எல்லாம் இந்தப் பிரச்சினைதான். நீங்க ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டீங்க. ரெண்டு வருசத்துக்கும் மேலே, ... இல்லியா? பகையை வளர்த்துக் கிட்டே போறதுல என்ன இருக்கு? அதை ஒரேயடியா தீர்த்துறணும். என்ன நான் சொல்றது?" அய்குவுக்கும் அவ புருசனுக்கும் ஒத்துப் போகல. மாமனார், மாமியாருக்கும் பிடிக்கலே... ம்... நான் முந்தி சொன்ன யோசனைப்படி செய்யுங்க. அவங்க பிரிஞ்சிறட்டும். உங்கலை சமாதானப்படுத்த என்னால முடியலை. உங்கலுக்கே தெரியும். ஏழாவது முதலாளி எப்பவும் நியாயந்தான் பேசுவாரு. அவரும் என்னைப் போலதான் நினைக்காரு. ஆனா, ரெண்டு பக்கத்துலேயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தா நல்லதுன்னு சொல்றாரு. ஷி குடும்பம் இன்னும் பத்து டாலர் சேர்த்துத் தொன்னூறு டாலரா குடுத்து தீர்த்துறட்டும் என்ன?

"…"

"தொன்னூறு டாலர். இந்த வழக்கை மன்னர் கிட்ட கொண்டுபோனா இந்த அளவு பெரிய தொகை கிடைக்காது. ஏழாவது முதலாளி தலையிட்டதாலதான் இவ்வளவு பெரிய தொகை கிடைக்குது!"

1 2