
Super girl
கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவின் சில தொலைக்காட்சி நிலையங்களும், இணைய தளங்களும் நாடு அளவிலான கலைத் திறன் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி, ஆயிரக்கணக்கான சாதாரண மக்களுக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் அரங்கை வழங்கியுள்ளன. இந்த மக்களிடையே சிலர், ஓரிரவுக்குப் பின் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அதே வேளை, சமூகத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
சீனாவின் உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் ஒன்று நடத்திய "super girl" என்ற போட்டிக்குப் பின், சாதாரண இளம் பெண்கள் சிலர், சீனாவில் அனைவராலும் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். சுமார் பத்து லட்சம் சீன இளைஞர்கள் அவர்களை விருப்ப நாயகர்களாக கருதுகின்றனர்.
2006ஆம் ஆண்டில் "super girl " என்ற போட்டியில் வெற்றி பெற்ற Shang Wen Jie என்பவர், முன்னர் நிறுவனம் ஒன்றில் சாதாரண பணியாளராக வேலை செய்தார். இப்போது அவர் நட்சத்திர வரிசையில் சேர்ந்துள்ளார். இறுதிப் போட்டிக்குப் பின் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது
"போட்டியில் சேர்ந்தது முதல் இன்று வரை, சில மாதங்கள் ஆகிவிட்டன. தொடக்கத்திலிருந்து மேற்கொண்ட முயற்சிகள் இறுதியில் பயன் தந்துள்ளன. இந்த வெற்றியில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால், என்னைப் பொறுத்த வரை, இது, முற்றுப்புள்ளியாக அல்லாமல், துவக்கப்புள்ளியாக இருக்கிறது" என்றார் அவர்.
1 2 3 4
|