
ஆனால், சமூகத்தில் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் ஒலி நிறைந்து காணப்படுவதில்லை. இந்த நிகழ்ச்சிகளை அலட்சியம் செய்யும் அல்லது நிராகரிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இல்லை. இத்தகைய நிகழ்ச்சிகள் வணிக நோக்கிற்காக அமையும் என்று சிலர் கருதுகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் கலைப்பற்று அற்றவை என்று செய்தி ஊடகத் துறையினர் சிலர் கருதுகின்றனர்.
பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் இத்தகைய போட்டி நிகழ்ச்சிகள் பற்றி சீன REN MIN பல்கலைக்கழகத்தின் சமூக இயல் துறையின் பேராசிரியர் Feng Shi Zheng ஆழ்ந்த ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் கூறியதாவது
"எமது சமூகம் மேலும் ஜனநாயகமாகச் செய்து, தங்களது நலன், விருப்பம் மற்றும் கோரிக்கையை வெளிப்படுத்த பொது மக்களுக்கு மேலும் அதிகமான வாய்ப்புகளை வழங்குவது, இந்த நிகழ்ச்சிகளின் தாக்கங்களில் ஒன்றாகும். பாரம்பரிய சமூகக் கட்டமைப்பில், திறமைசாலிகளின் குரல் மட்டுமே கேட்கப்படலாம். தற்போதைய சமூகத்தில், பொது மக்கள் தங்களது விருப்பத்தையும் குரலையும் மேலும் கூடுதலாக வெளிப்படுத்த முடியும். இனிமேல், பொது மக்களின் குரல் மேலும் அதிகமான துறைகளில் பரவலாகும்" என்றார் அவர். 1 2 3 4
|