• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-15 10:09:41    
நேயர்களை நெருங்கிய முயற்சி அதாவது தமிழகத்திலான பணி பயணம் பற்றிய மீளாய்வு

cri

அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு கடந்த நவம்பர் திங்கள் 26ம் நாள் காலை 9:30 மணியளவில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தேசிய பாணியுடன் கூடிய மேளதாள இசையுடன் தெற்காசிய நாடுகளுக்கான மதிப்புக்குரிய சீன வானொலி பிரதிநிதிக் குழு வரவேற்கப்பட்டது. மேள ஒலியுடன் நேயர்களின் 500க்கும் அதிகமான பிரதிநிதிகள் சில நூறு கிலோமீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்ட பின் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்களுடன் சேர்ந்து மண்டபத்தில் நுழைந்தனர். பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினர் சி பொன்னு துரை, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் குப்பு சாமி, இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவத் தலைமைச் செயலர் தாமஸ் ப. ஜான், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் முதலிய பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களாக கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கூட்ட மேடையில் சீனத் தேசிய கொடியும் இந்திய தேசிய கொடியும் தொங்கவிடப்ட்டிருந்தன. பல்வேறு நேயர் மன்றங்களின் கொடிகளும் மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் அழகுடன் தொங்கவிடப்பட்டிருந்தன. மண்டபத்தில் அன்பான விழாச் சூழ்நிலையும் நிறைந்திருந்தது. நேயர் மன்றங்களின் பிரதிநிதிகள் கருத்தரங்கின் செயலகத்தின் வழிக்காட்டலின் படி ஒழுங்கான முறையில் உட்கார்ந்தனர். நினைவுப் பொருளை வாங்குவதற்கான சீட்டு விநியோகிக்கப்பட்டது.

இந்திய தேசிய பண் ஒலியுடன் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு துவங்கியது. அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைமை செயலாளர் பல்லவி கெ பரமசிவன் கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரலை வாசித்தார். அதையடுத்து பிரதிநிதிக் குழுத் தலைவர் சுன் சியென் ஹு சீன வானொலி நிலையத்தின் இயக்குனர் வுவாங் கன் நியனின் வாழ்த்துரையை வாசித்தார். தமிழ்ப் பிரிவின் இயக்குனர் தி. கலையரசி கருத்தரங்கிற்கு வாழ்த்துரையும் 2005ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையான ஓராண்டில் நேயர்களுக்கு சேவைபுரியும் பணியையும் மீளாய்வு செய்தார். கருத்தரங்கில் 2006ம் ஆண்டுக்கான சிறந்த மற்றும்் தலைசிறந்த நேயர்களின் பெயர் பட்டியலும் சிறந்த நேயர் மன்றங்களின் பெயர் பட்டியலும் வாசிக்கப்பட்டன.

1 2