• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-15 10:09:41    
நேயர்களை நெருங்கிய முயற்சி அதாவது தமிழகத்திலான பணி பயணம் பற்றிய மீளாய்வு

cri

தேப்ந்தெடுக்கப்பட்ட நேயர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைவர் எஸ் செல்வம் நேயர்களுக்கு மன்றத்தின் ஓராண்டு பணி பற்றி அறிக்கை வழங்கினார்.

கடந்த ஓராண்டில் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் சில பொறுப்பாளர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் 7 மாவட்டங்களில் பணிப் பயணம் செய்து சீன வானொலி பற்றி பிரச்சாரம் செய்தனர். சீன வானொலியின் சார்பிலும் நேயர்களின் சார்பிலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட துவக்க பள்ளி மாணவர்களுக்கு 2000க்கும் அதிகமான ரூபாய் நன்கொடையாக வழங்கினர். நோய்வாய்பட்டவருக்கு நேயர்கள் ரத்த தானம் செய்தனர். செல்லிட பேசி வலைப்பின்னலை நிறுவி தினந்தோறும் பதிவு செய்த 300க்கும் அதிகமான நேயர்களுக்கு இலவசமாக சீனச் செய்தித் தகவலை கிறுந்தகவில்களாக பகிர்ந்தனர். நேயர்கள் அவர்களுடைய செல்லிட பேசி எண்ணை சொன்னால் செல்லிட பேசி விலைப் பின்னலின் உறுப்பினரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். செய்திகள் பெறுவதற்கு அவர்களுக்கு இலவசச் சேவை வழங்கப்படுகின்றது. இந்த செய்திகள் முக்கியமாக சீன சின்குவா செய்தி நிறுவனம், சைனா டெல்லி போன்ற ஆங்கில இணைய தளங்களிலிருந்து பெறப்படுகின்றன. 2005ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12ம் நாள் நிறுவப்பட்ட இந்த செல்லிட பேசி வலைப் பின்னல் இது வரை 20 ஆயிரத்து 60 செய்திகளை விநியோகித்துள்ளது. இவை அனைத்தும் பற்றி தலைவர் எஸ் செல்வம் அறிவித்த போது கருத்தரங்கில் கலந்து கொண்ட நேயர்களிடமிருந்து பாராட்டையும் வரவேற்பையும் பெற்றார். சீன இந்திய நப்புறவின் வளர்ச்சிக்காக மேலும் பங்கு ஆற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

கருத்தரங்கில் கங்காயாஞ்சி நேயர் மன்றத் தலைவர் பொன் தங்க வேலன் தாம் கற்றுக் கொண்ட சீன மொழியை தொகுத்து உருவாக்கிய பாடலை பாடினார். பல்வேறு நேயர் மன்றங்களின் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து மன்ற உறுப்பினர்களின் சார்பில் மேடையேறி உரை நிகழ்த்தினர். அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றம் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் மன உறுதியை தெரிவித்துள்ளனர். ஊனமுற்ற மாணவர்கள் ஆசிரியரிகளின் கை மொழியின் வழிக்காட்டலில் தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

கருத்தரங்கின் மூன்றாவது அம்சம் வெளிப்படையான உரையாடாலாகும்.


1 2