50 ஆண்டுகளுக்கு முன், இதர E Lun Chun இனத்தவர்களைப் போலவே, அஜிலங்கும் மலையிலிருந்து வெளியேறி சமவெளிப்பிரதேசத்தில் குடியேறினார். இங்கு வாழ்க்கை வசதியாகவுள்ளது. உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் பலவித பொருட்களை சந்தையிலிருந்து வாங்கலாம். ஆனால், இவ்வளவு நீண்டகாலத்திலும் கூட அஜிலங், தமது கைவினை நுட்பத்தைக் கைவிடவில்லை. நாள்தோறும் பூர்ச்ச மரப்ட்டையைக் கொண்டு மூன்று கைவினைப் பொருட்களைத் தயாரிக்கிறார். ஆனால் சமவெளியிலிருந்து மலைகளில் ஏறி, பூர்ச்ச மரப்பட்டைகளைப் பெறுவது, இப்போது அஜிலங் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய இன்னலாகியுள்ளது.

"பூர்ச்ச மரப்பட்டைகளை மலை ஏறி கொண்டு வருவதற்கு, மூன்று நான்கு பெண்கள் கூட்டாக சென்று வர வேண்டும். நாங்கள் அதிகாலையிலேயே உணவுப் பொருட்களையும் குடிநீரையும் எடுத்துக் கொண்டு, இன்று இந்த மலையில் நாளை மற்ற மலையில் ஏறி பூர்ச்ச மரப்பட்டைகளை முதுகில் வைத்து, வீட்டுக்குக் கொண்டு வருவது வழக்கம்" என்றார்.
இப்போது அஜிலங்கிற்கு வயது முதிர்ந்து போகின்றது. கண் பார்வையிலும் சிக்கல் ஏற்பட்டது. கைகளும் நடுங்கத் துவங்கி விட்டன. இந்த கைவினை நுட்பத்தைக் கைவிடாமலிருப்பதற்குக் காரணம் என்ன? பூர்ச்ச மரப்பட்டைக் கைவினைப் பொருட்களாகத் தயாரிப்பது, தமக்கு ஒரு தீராத வழக்கமாக மாறியுள்ளது என்று அஜிலங் கூறினார்.

1 2 3
|