• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-16 08:59:06    
E Lun Chun இனத்தின் பாரம்பரிய பண்பாடு

cri

50 ஆண்டுகளுக்கு முன் பெரிய மலைகளில் வசிக்கும் E Lun Chun இன மக்கள் தொடக்கக்கால சமுதாயத்தில் இருந்தனர். அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகள் மிகவும் பின்தங்கியவை. கடந்த சில ஆண்டுகளில் E Lun Chun இனத்தவர்கள் வாழும் இடங்களில் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்க்கையும் நவீனமயமாகியுள்ளது. மலைகளில் இருப்பது போல், உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே, பூர்ச்ச மரப்பட்டைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் வாய்ப்பும் மென்மேலும் குறைந்து வருகின்றது என்பது இயல்பே. இக்கைவினை நுட்பத்தை கற்றுத் தேர்ந்தவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் குறைந்து வருவதைக் கண்டு முதியோர் அஜிலங் கவலைப்பட்டுள்ளார். எனவே, இந்நுட்பத்தைக் கைவிடக் கூடாது என அவர் உறுதி பூண்டார். அன்றி நேரத்தைப் பயன்படுத்தி கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று, அஜிலங் தம்மை தாமே நிர்பந்தித்துக் கொண்டார்.

இப்போது, அஜிலங்கிற்கு 5 மாணவிகள் இருக்கின்றனர். அனைவரும் ஒரே வட்டத்திலுள்ள E Lun Chun இன பெண்களாவர். மாணவிகள் தமது கைவினை நுட்பத்தின் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளதால் சில ஆண்டுகளுக்குள் இதை அடிப்படையில் கற்றுத் தேர்ந்துள்ளனர் என்பது முதியோருக்கு மகிழ்ச்சி தந்தது.

மேலும் அதிகமான E Lun Chun இனத்தவர்கள், இக்கைவினை நுட்பத்தைக் கற்றுக்கொள்ளுமாறு ஊக்கமளிக்கும் வகையில், உள்ளூர் அரசு வட்டத்தின் பெரும் மண்டபத்தில் பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளது. முதியோர் அஜிலங், இப்பயிற்சி வகுப்பின் ஆசிரியராக, அங்குள்ள பெண்களுக்கு கைவினை நுட்பத்தை கற்றுக் கொடுக்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளில் டொசாமி வட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ந்துள்ளது. வெளியூர் பயணிகள் பூர்ச்ச மரப்பட்டையாலான கைவினைப் பொருட்களை விரும்பி வாங்கியுள்ளனர். இந்நுட்பம், உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.


1 2 3