• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-28 14:54:37    
விவாக ரத்து 6

cri

"எனக்குத் தெரியும். ஏதாவது காரணம் இல்லாம இருக்காது. ஏழாவது முதலாளிக்கு இதெல்லாம் தெரியும். படிச்ச பெரிய மனுசங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. அவங்க உண்மையை அறிஞ்சவங்க. இவனை அந்தச் சிறுக்கி மயக்கிட்டா. என்னை துரத்தப் பார்க்கிரான். சடங்கு சம்பிரதாயங்களோடதானே நான் இவனைக் கட்டிக்கிட்டேன். என்ன குறைச்சலா செஞ்சோ? ஏராளமா தேயிலை, ஆறுவகை பரிசங்கள்—பல்லக்குல என்னை சுமந்துட்டுப் போயி இவன் வீட்டுல இறக்குனாங்க. என்னை அவ்வளவு லேசில தூக்கி எறிஞ்சிற முடியுமா? நான் யாருங்கறதை இவங்களுக்கு காட்டுறேன். கோர்ட்டுக்கு கூடப் போவேன். கீழ் கோர்ட்டுல தீரலைன்னா மேல் கோர்ட்டுக்குப் போவேன்."

"அய்கு சும்மா கிட" என்று இடைமறித்த வெய்," இப்படிப் பேசறது. "உனக்கு நல்லது இல்லை. ஏழாவது முதலாளிக்கு எல்லாம் தெரியும். நீ உன் புத்தியை விட மாட்டேஹ்கிறியே! உன் அப்பனைப் பாரு புத்திசாலி. நீயும், உன் அண்ணன் தம்பிகளும் எவ்வளவு அவனைப் போல இல்லியே? நீ மேல் கோர்ட்டுக்குப் போனா அந்த நீதிபதி ஏழாவது முதலாளிகிட்ட என்ன ஏதுன்னு கேக்க மாட்டாருன்னு நினைக்கிறியா? அங்க பகிரங்கமா விசாரணை நடக்கும் யாரோட உணர்ச்சிகளையும் மதிக்க மாட்டாங்க... அப்படின்னா..." என்று இழுத்தார்.

"என் வாழ்க்கையையே பணயம் வைக்கத் தயார் ரெண்டு குடும்பங்களும் அழிஞ்சாலும் பரவாய் இல்லே."

"அப்படி எல்லாம் அவசரப்படக் கூடாது." ஏழாவது முதலாளி மெல்லக் குறுக்கிட்டார்.

"நீ இன்னும் இளமையாத்தான் இருக்கே. நாம எல்லாம் சமாதானமாப் போகணும். சமாதானம்தான் செல்வத்தைச் சேர்க்கும். என்ன நான் சொல்றது சரிதானே? இன்னும் ஒரு பத்து டாலர் சேர்த்து வாங்கிக்கோ. இதுக்கு மேல கிடைக்குமா என்ன? உன் மாமானாரும், மாமியாரும் போன்னு சொன்னா போயிற வேண்டியதுதான். கோர்ட், கீர்ட்டுன்னு பேசக் கூடாது. ஷாங்கை, பீகிங் ஏன் வெளிநாடுகளில கூட இப்படித்தான். நான் சொல்றதுல நம்பிக்கை இல்லியா? இவனைக் கேளு. இப்பத்தான் பீகிங்குல வெளிநாட்டுப் பள்ளியில படிச்சுட்டு வந்துருக்கான்" என்று கூறியபடியே தன்னுடைய மகனைப் பார்த்துத் திரும்பி, "அப்படித்தானே!" என்று வினவினார்.

1 2