• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-01 08:39:39    
நட்புறவை அதிகரித்த முயற்சி

cri

பல நேயர்கள் அடுத்தடுத்து மேடையில் உரை நிகழ்த்தினர். சிறந்த பல யோசனைகளை முன்வைத்தனர். கூடுதலான சிறந்த நேயர்களை தேர்வு செய்ய வேண்டும். சீன வானொலி நிலையத்தின் தலைமையிலான பொது அறிவு போட்டியில் கலந்து கொள்ள நேயர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பத்தையும் கோரிக்கையையும் முன்வைத்தனர். கருத்தரங்கு காலை ஒன்பதரை மணி யிலிருந்து பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. கூட்ட சூழ்நிலை எப்போதும் உயர்வான நிலையில் இருந்தது. பிரதிநிதிக் குழுவின் பணி பயணத்தின் காரணமாக உறுப்பினர்கள் நேயர்களுடன் மத்திய உணவு உட்கொண்ட பின் அடிக்கடி திரும்பி எங்களை பாருங்கள் என்ற குரலில் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்கள் அவர்களின் நேபாள பணிப் பயணத்தை துவக்கினர்.

கருத்தரங்கின் தனிச்சிறப்பியல்புகள் பின் வருமாறு. சேலம் மாவட்ட நேயர் மன்றம் கருத்தரங்கு நடைபெறும் அதே நாளில் நிறுவப்பட்டது. சோழன் வட்டார நேயர் மன்றம், சேலம் மாவட்ட நேயர் மன்றம், பெருந்துறை மகளிர் நேயர் மன்றம், தருமபுரி மாவட்ட நேயர் மன்றம் முதலிய நேயர் மன்றங்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள உறுப்பினர்களையும் மன்ற கொடியையும் அனுப்பின. அடுத்த கருத்தரங்கு தர்மபுரியில் நடத்த வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட நேயர் மன்றத் தலைவர் கருத்தரங்கிற்கு விண்ணப்பம் செய்தார். நேயர் மன்றத்தின் செல்வாக்கு நாள்தோறும் பெருகியுள்ளது. அதன் பணித் திறனும் ஒழுங்கான முறையில் வலுப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பணிப் பயணம் செய்த போது பிரதிநிதிக் குழு கருத்தரங்கில் கலந்து கொள்வது மட்டுமல்ல பல்வகை வாய்ப்புகளை பயன்படுத்தி மிக பல தமிழர்களுடன் தொடர்பு கொண்டது. அங்கே தங்கியிருந்த 4 நாட்களில் தி. கலையரசி தினந்தோறும் செல்லிட பேசி மூலம் வானொலிக்கு செய்திகளை அறிவித்தார். பத்திரிகைகள் பண்பலை வானொலி உள்ளூர் தொலைக் காட்சி ஆகிய செய்தி ஊடகங்களின் மூலம் சீனா பற்றியும் சீன வானொலி நிலையம் பற்றியும் பிரச்சாரம் செய்தார். தினமணி, தினகரன், தினத்தந்தி, தினமலர், மாலைமலர், தமிழ்முரசு முதலிய செய்தியேடுகளின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கொங்கு பொறியியல் கல்லூரியை பார்வையிட்டு அங்குள்ள பண்பலை வானொலியின் ஒலிப் பதிவு அறையில் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்கள் விருந்தினர்களாக உபசரிக்கப்பட்டு கல்லூரி மாணவர்களுடன் உரையாடி நிகழ்ச்சியை உருவாக்கினார்கள். செய்தி ஊடகங்களுடன் மேற்கொண்ட பேட்டியும் கருத்தரங்கு நடைபெற்ற செய்திகளும் வெளியிடப்பட்ட பின் தமிழகத்தில் சீன வானொலியின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு துணை புரிவுது திண்ணம். விளைவாக அதிகமான நண்பர்கள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்க உள்ளனர் என்று நம்புகின்றோம்.

1 2