பெருந்துறையில் தங்கியிருந்த போது பிரதிநிதிக் குழுவுறுப்பினர்கள் சமூக நலத் துறையில் ஈடுபட்டு 20க்கும் அதிகமான நட்பை உணர்த்தும் செடிகளை நட்டனர். சீன இந்திய நட்புறவின் வளர்ச்சியுடன் இந்தச் செடிகள் ஆரோக்கியமாக விறுவிறுப்பாக வளரும். அடுத்த முறை இந்தியாவுக்கு வரும் போது இந்தச் செடிக நிற்கும் என்று நம்புகின்றோம்.
கருத்தரங்கை மீளாய்வு செய்யும் போது ஈரோடு நேயர் மன்றத்தின் முயற்சியை மறக்க கூடாது. மன்றத் தலைவர் பி. ஏ. நாச்சி முத்து, தார்வழி பி ரமேஷ் முதலிய நேயர்கள் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதற்காக மேற்கொண்ட முயற்சியை பாராட்ட வேண்டும். அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத் தலைமை செயலாளர் பல்லவி கெ பரமசிவன் வானொலி நிலையத்தால் வழங்கப்பட்ட பொருட்களை கொண்டு நடத்திய கண்காட்சிக்கு மிக்க நன்றி. கருத்தரங்கு நடைபெறும் மண்டபத்தை அழுகுபடுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்ட வண்ணக் கொடிகள் சுற்றறிக்கை, விளம்பர புத்தகம் ஆகியவை பரமசிவனின் முயற்சியின் காரணமாகும். இங்கே அவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றோம். வரவேற்பு விழாவில் பி.ஏ.நாச்சிமுத்து நடனக் குழுவுடன் சேர்ந்து கால் மேள நடனத்தை ஆடும் காட்சி இன்னும் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்களில் நிற்கின்றது. இங்கே ஈரோடு நேயர் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறுகிய 4 நாட்களின் தமிழக பணிப் பயணத்தின் மூலம் தமிழ் பிரிவுக்கும் நேயர்களுக்குமிடையிலான நட்புறவு நெருங்கியுள்ளது. புரிந்துணர்வு வலுபட்டுள்ளது. நான்கு நாட்களில் பிரதிநிதிக் குழுவுறுப்பினர்களுக்கு உதவி செய்த வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், பாண்டிசேரி என் பாலகுமார், ஜி கோபால், சேந்தமங்கலம் எஸ். எம், ரவிச்சந்திரன், பகளாயூர் பி. ஏ. நாச்சி முத்து, பெருந்துறை பல்லவி கெ பரமசிவன், தார்வழி பி. ரமேஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். 1 2
|