கஜக் இனம் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், குதிரை, மக்களின் நினைவில் வருவது வழக்கம். நீர் மற்றும் புல்லைத் தொடர்ந்து வாழும் நாடோடி தேசிய இனமான, கஜக் இனத்தவர்கள் குதிரையை போக்குவரத்து கருவியாகவும், குதிரை இறைச்சி மற்றும் குதிரை பால் மதுவை உணவுப் பொருளாகவும் கொள்கின்றனர்.

குதிரைத்தோலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை, அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்துகின்றனர். இன்று வட மேற்குச் சீனாவின் சிங்கியாங் இ லி கஜக் தன்னாட்சி நிர்வாகப் பிரதேசத்தின் குன்லியூ மாவட்டத்தில் வாழும் கஜக் இன ஆயர்கள், குதிரை தொடர்பான தேசிய இனத் தனித்தன்மை வாய்ந்த சுற்றுலாத்துறையை வளர்க்க துவங்கியுள்ளனர். இதனால், அவர்கள் படிப்படியாக வளமடைந்து வாழ்கின்றனர். அண்மையில் எமது செய்தியாளர், இம்மாவட்டத்தின் குர்தேநிங் மலை பிரதேசத்தில் கம்பளித் துணிக்கூடாரங்களையும் கொழு கொழுவென்று வளர்ந்துள்ள குதிரைகளையும் கண்டுள்ளார். கஜக் இன ஆயர் Sahatஇன் கம்பளித்துணிக் கூடாரத்துக்கு அவர் சென்றார். கூடாரத்தின் நான்கு பக்கங்களிலும் தரையிலும் பல வண்ண கம்பளித்துணி விரிப்புகள் போடப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு, முழுக் கூடாரமும் எழிலானது. கூடாரத்தின் உரிமையாளர் Sahat செய்தியாளரிடம் பேசுகையில், இக்கம்பளித்துணிக்கூடாரம், முக்கியமாக சுற்றுலாவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. விருந்தினர் இல்லா நேரத்தில், குடும்பத்தினர்கள் வசிக்கின்றனர் என்று கூறினார். கூடாரத்தின் அலங்காரத்திலிருந்து, இக்குடும்பத்தினர்களின் வாழ்க்கைத் தரம் பரவாயில்லை என்பது தெளிகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமது குடும்பம் சுற்றுலாத்துறையில் ஈடுபடத் துவங்கியதாக அவர் கூறினார். அவர் கூறியதாவது:
"2010ம் ஆண்டு நான் சுற்றுலாத்துறையில் ஈடுபடத் துவங்கினேன். விடுதலை அடைவதற்கு முன், நாங்கள் பெரும்பாலானோர், கம்பளித்துணிக் கூடாரங்களில் வசித்தோம். விடுதலையடைந்த பின், எங்கள் Agaersen வட்டத்தின் ஆயர்கள் அனைவரும் மலை அடிவாரத்துக்குச் சென்று குடியேறினோம். அங்கு, பயிர் சாகுபடி செய்கின்றோம். உற்பத்தியில் ஈடுபடுகின்றோம். கோடைக் காலத்தில், சில ஆயர்கள் தங்கள் கால்நடைகளை மலைகளில் மேய்க்கின்றனர். அல்லது சுற்றுலாத் துறையில் ஈடுபடுகின்றனர்" என்றார், அவர்.

குன்லியூ மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலான குர்தேநிங் மலைப் பிரதேசம், இயல்பான கோடைக்கால புற்பிரதேசமாகும். இங்கு செழிப்பான சுற்றுலா மூலவளங்கள் உண்டு. புத்தாயிரம் ஆண்டில், கால் நடை வளர்ப்புத் தொழிலையும் சுற்றுலாத்துறையையும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கான இரண்டு பெரிய முதுகெலும்புகளாக்குவதென்ற நெடுநோக்குத் திட்டத்தை Agaersen வட்ட அரசு வகுத்தது. வட்டத்தின் கட்சிக் கமிட்டிச் செயலர் Nasihat செய்தியாளரிடம் கூறியதாவது:
"கால் வளர்ப்புத் தொழில், சுற்றுலாத்துறை ஆகிய இரு முதுகெலும்புத் தொழில்கள் மூலம் எங்கள் வட்ட பொருளாதாரத்தை வளர்த்துள்ளோம். பல்வேறு தேசிய இனங்களின் வருமானத்தை, குறிப்பிட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளோம். கால் நடை வளர்ப்புத் தொழிலில், தரத்தையும் இன வகைகளைச் சிறக்கச் செய்தலையும் கருத்தில் கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறையில், பல்வேறு தேசிய இன மக்கள் கூட்டாக வளர்ச்சியடையச் செய்யும் வகையில் அவர்களை, சுற்றுலாத்துறைக்கு வழிகாட்ட வேண்டும்" என்றார்.
1 2
|