Sahat, அரசின் வேண்டுகோளுக்கிணங்க துவக்கத்திலிருந்து சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஆயர்களில் ஒருவராவார். அவர்களின் வெற்றியினால், மேலதிகமான விவசாயிகளும் ஆயர்களும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவரது உறவினர்கள், அவரது செல்வாக்கினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளனர். இப்போது, Agaersen வட்ட மக்களின் வாழ்க்கை நிலை, பெரிதும் மேம்பட்டுள்ளது. அவர்களின் வருமானம், பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, பல மடங்கு அதிகரித்துள்ளது என்று கட்சிக் கமிட்டி செயலர் Nasihat கூறினார். இது பற்றி Sahat கூறியதாவது:
"முன்பு, ஓரிரு நூறு ஆடுகளை வளர்ப்பதன் மூலம் ஓராண்டில் பத்தாயிரம் யுவானுக்குள் மட்டும் பெற்றோம். ஆனால், சுற்றுலாத்துறை மூலம், கோடைக்காலத்தில் மட்டும், நான்கு-ஐந்து திங்களில் இருபதாயிரம் யுவானுக்கு மேல் சம்பாதித்தோம்" என்றார்.

சுற்றுலாத்துறை மூலம் நன்மை பெற்றுள்ள அவர், இத்துறையில் மென்மேலும் கவனம் செலுத்தியுள்ளார். விருந்தினர்கள், கூடாரங்களில் கஜக் இன நடையுடை பாவனையை மேலும் அனுபவிக்கச் செய்ய, அவர், தேசிய இனத் தனித்தன்மையுடைய சித்திரத் தையல் பொருட்களை, கூடாரத்திலுள்ள அலங்காரத்தில் பயன்படுத்துகின்றார். அன்றி, விருந்தினர்களின் கருத்துக்களின் படி அதை முழுமையாக்குகின்றார்.
கஜக் இன பாணியுடைய சுவர் கம்பளித்துணி விரிப்பும் தரைக் கம்பளித்துணி விரிப்பும் இக்கூடாரத்தில் நிறைய காணப்படுகின்றன. சுத்தமான போர்வைகள், கதவுக்கு நேர் எதிர் இடத்தில் சீராக வைக்கப்பட்டுள்ளன. கஜக் இனத் தேசிய இன ஆடைகள் கதவின் வலது பக்கத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன. விருந்தினர்கள் படம் பிடிப்பதற்கு இவை பயன்படுபவை என்பது தெளிவு.

கஜக் இனத்தின் தனிச்சிறப்பியல்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் நின்று விடாமல், விருந்தினர்கள் மனநிறைவுடன் உண்டு மகிழச் செய்வதற்காக, அவர் தமது பேரவை முன்றாண்டுகாலம் சமையல் கலையைக் கற்றுக் கொள்ள இலிக்கு அனுப்பினார். அவர் கூறியதாவது:
சுற்றுப் பயணத்துக்கு அதிகமான சமையல்காரர்கள் தேவைப்படுகின்றனர். ஏனெனில், விருந்தினர்கள், தேசிய இனத் தனித்தன்மையுடைய உணவுகளை ருசிபார்க்க விரும்புவது தவிர, சில வேளையில், நகரவாசிகள் விரும்பிச் சாப்பிடும் கறிகளை உட்கொள்ளவும் விரும்புகின்றனர். அவற்றைச் சமைக்க முடியாமலிருந்தால், விருந்தினர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும். எனவே, தான் தமது பேரவை அங்கு அனுப்பியதாகக் கூறினார். சுற்றுலா காரணமாக, Sahat குடும்பம் வளமடைந்து, வாழ்க்கை படிப்படியாக நவீனமயமாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் இரண்டை வாங்கியுள்ளது. குடும்பத்தினர்கள் ஒவ்வொருவருக்கும் செல்லிடப் பேசி உள்ளது. 1 2
|