• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-05 16:21:47    
ஷாங்ரி லாவின் பசுமையாக்கம்

cri

கன்னித்தீவு என்று சொன்னால் தமிழகத்தில் சற்றேறக்குறைய அனைவருக்கும் அது ஒரு நாளிதழில் வரும் படக்கதை எனத் தெரியும். அந்த கன்னித்தீவு எங்கே இருக்கிறது என்று அனேகமா யாரும் தேடிப் பார்த்திருக்க மாட்டார்கள். கதையில் வரும் இடம்தானேப்பா, அதையாச்சும் தேடுவாங்களோ? கதை என்று சொல்லும்போது எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, அத்தை என்று நம் உறவுகளில் யாராவது ஒருவரிடம் நாம் கதை சொல்லிக் கேட்டிருப்போம் அல்லவா. கதை சொல்பவர்கள் எல்லோருமே பொதுவாக இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் " ஒரு ஊர்ல"...!!

அந்த ஒரு ஊர் எங்கிருக்கிறது, அந்த ஊரின் பெயர் என்னவென்று நாம் கேட்டதில்லை, கேட்டிருந்தாலும் அதற்கு பதில் நமக்கு கிடைத்திருக்காது.

இப்படி காணப்படாத ஊர்களும், தீவுகளும், இடங்களும் கதைகளில் குறிப்பிடப்படுவது ஒன்றும் புதிததல்ல. கதை சொல்லும் பாங்கில் இந்த அம்சம் பல்லாண்டுகளாக இருந்து வருவதுண்டு. அதேவேளை ஒரு சில இடங்கள் கதைகளில் இடம்பெறுவது போலவே உண்மையாகவே இருப்பதும் உண்டு. ஒரு சில கதைகளில் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, உண்மைச் சம்பவங்கள் கதைகளாக்கப்படுவதும் உண்டு. கதை எழுத சொல்லிக்கொடுப்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை நண்பர்களே.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள உன்னான் மாநிலத்தில் இப்படியான ஒரு கதைரீதியிலான ஒரு இடமுண்டு. கன்னித்திவு போல, புராணக்கதைகளில் வரும் இடங்களைப் போல, இங்கே ஒரு பகுதி சாங்ரி லா என்று அழைக்கப்படுகிறது.

கனவுலகாக, சொர்க்கமாக கருதப்படும் ஷாங்ரிலா என்பது யுன்னான் மாநிலத்தில் உள்ள டிசிங் திபெத் தன்னாட்சி நிர்வாக பிரதேசத்தை குறிப்பதாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்த கனவுலக சொர்க்கமான ஷாங்ரிலா பகுதியில் தற்போது பிரச்சனை. இப்பகுதியின் சுத்தமான வனப்பகுதிகளின் வளங்களை பாதுகாப்பது தற்போதைக்கு அவசரமான தேவையாகியுள்ளது என்கிறார் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பசுங்கூடத் திட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் பை வென்ஃபெங்.

பண்டைக்காலந்தொட்டே இயற்கையோடு இயைந்த வாழ்வாக அமைந்த இந்த டிசிங் திபெத் தன்னாட்சி நிர்வாக பிரதேசத்தைச் சேர்ந்த திபெத்தின மக்களின் வாழ்க்கை முறையே இந்த பேராசிரியரின் கவலைக்கும் கரிசனைக்குமான காரணத்தின் மூலமாகும். இந்த மக்களின் விசாலமான அகன்ற பரப்பில் அமைந்த வீடுகளில் சராசரியாக 200 கியூபிக் மீட்டர் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலான இயற்கையான வனப்பகுதியை அழித்தால் கிடைக்கும் அளவு மரங்கள். வீடுகளுக்குச் சென்று பார்த்தால் ஏன் இவ்வளவு மரங்கள் தேவை என்று நமக்கு புரியும். வீடுகளின் தரை, வீட்டைச் சுற்றிய வேலிகள், வீட்டில் படிக்கட்டுகள், உட்புறத் தடுப்புச் சுவர்கள், நாற்காலி, முக்காலி, மேசை என வீட்டுக்குள்ளே இருக்கும் மரப்பொருட்களுக்கு கூடுதலாக 10 கியூபிக் மீட்டர் மரங்கள், அதாவது மற்றுமொரு ஹெக்டேரில் 20ல் ஒரு பகுதிவனம் அழிக்கப்படுகிறது. அட இத்துடன் முடிந்ததா என்றால், இல்லை. வீட்டில் குளிருக்கும் சமையலுக்கும் தீமூட்ட ஆண்டுக்கு 14 கியூபிக் மீட்டர் மரங்களை ஒவ்வொரு குடும்பமும் எரித்து சாம்பலாக்குகின்றன. ஆண்டுக்கு ஒரு குடும்பம் எரிபொருளாய் மரங்களை பயன்படுத்த 0.07 ஹெக்டேர் நிலப்பரப்பிலான காடு அழிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கே இப்படியென்றால் இப்பகுதியில் உள்ள மொத்த குடும்பங்களையும்கணக்கில் சேர்த்தால் ஷாங்ரில பகுதியின் வனப்பகுதி பற்றி பேராசிரியர் பை வென்ஃபெங் கவலைப்படுவதிலுள்ள தீவிரம் நமக்கு புரிகிறது.

1 2