• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-05 16:21:47    
ஷாங்ரி லாவின் பசுமையாக்கம்

cri

1998ல் இப்பகுதியில் மரம் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டபோதிலும், அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி 2004ம் ஆண்டில் டெச்சென் என்ற ஒரு வட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரம் கியூபிக் மீட்டர். வேறு விதமாகச் சொன்னால் 1100 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி மூளியாக்கப்பட்டது. இதில் 78 விழுக்காட்டு மரங்கள் எரிபொருளாகவும், 17 விழுக்காடு கட்டிடப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வு கூறுகின்றது. சீனாவின் ஃபூச்சியான் மாநிலத்தில் உள்ள மொத்த வனப்பகுதிக்கொ சமமானது இந்த ஷாங்ரிலா வனப்பகுதி. ஆனால் எரிபொருளாகவும், கட்டுமான பொருளாகவும் மரங்கள் பயன்பட இந்த வனப்பகுதி வெறுமையாக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியின் இயற்கைச் சூழலும் சிக்கலான நிலையில் உள்ளது. குளிரான தட்ப வெப்பச் சூழலும், இப்பகுதியின் மெல்லிய பூமியடுக்குகளும் மரங்கள் மீண்டும் வளரும் வேகத்தை பாதிக்கின்றன, தடுக்கின்றன. அதேவேளை இந்த ஷாங்ரிலா என்ற டிசிங் திபெத் தன்னாட்சி நிர்வாக பிரதேசத்தின் மக்கள் தொகை கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது என்கிறார், இப்பகுதியின் வனமயமாக்க துறையின் முன்னாள் தலைவரும், இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஷாங்ரில பகுதி அலுவலகத்தின் இயக்குநருமான ஹெ சிங். இப்பகுதியின் திபெத்தின மக்கள் மேலும் அதிகமாக வீடுகளை கட்டுகின்றனர், வசதியானவர்கள் மிகப்பெரிய வீடுகளை கட்டுகின்றனர் இதனால் மேலும் மேலும் மரங்கள் வெட்டப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இயற்கை பாதுகாப்பு அமைப்பு என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அரசு சாரா அமைப்பு இந்தப் பகுதியில் சோதனைமுறையில் இரு பசுமைமயமாக்க திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தாவர அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமே ஒரு பசுங்கூடம் தான், அதாவது பசுமையான கட்டிடம். குளிருக்கு வெப்பமேற்படுத்த சூரிய ஒளி ஆற்றலை சேமிப்பது, உள்ளே வெறுந்தரை, செஙகல், சிமென்டு என்று எந்த கட்டிடப்பொருளும் போடப்படாத வெற்றுத்தரை. சுவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூங்கில்களால் உருவானவை, ஆக மரங்களின் பயன்பாடு இந்த கட்டுமானத்தின் குறைவே. மற்ரொரு திட்டமான கேசா பசுமைப் பள்லீயில் மரங்களின் தேவை 60 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பாரம்பரிய கட்டிட பாணியும், புத்தாக்க முறையில் இயற்கைக்யோடு இயைந்த கட்டுமான அமைப்புமாக இந்த பசுமை திட்டப்பணிகள் கேட்பதற்கும், பார்பதற்கும் பிரமிப்பூட்டுகின்றன.

மறுபுறம், உள்ளூர் அரசுகள் விரைவில் இப்பகுதியில் திபெத்திய வீடுகளை சீரமக்க 2 லட்சம் ஒதுக்கவுள்ளதாக நம்பிக்கை கூறப்படுகிறது. விரைவில் இப்பகுதியில் மூன்று கிராமங்களில் இப்பணிகள் துவங்கும் என்கிறார் உள்ளூர் அதிகாரி ஒருவர்.

ஆக கன்னித்திவு போன்ற ஷாங்ரிலா பசுமையாக்கப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது


1 2