• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-07 09:41:43    
விவாக ரத்து 7

cri

"முதலாளி முடிவுக்கு நான் எப்பவுமே கட்டுப்படறவதான்."

அந்த அறையில் ஒரு கீச்சொலிகூட கேட்கவில்லை. பட்டுநூல் போல பிரிந்து பிரிந்து அவளுடைய வார்த்தைகள் வெளிப்பட்ட போதிலும், வெய் இடி இடித்தது போல உணர்ந்தார்.

துள்ளிக்குதித்து கைகளைத் தட்டியபடியே "ரொம்ப நல்லது. ரொம்ப...ரொம்ப நல்லது" என்றார். "ஏழாவது முதலாளி நிஜமாவே நியாயம் தவறாதவர். அய்குவும் மோசம் இல்லே. அப்படின்னா, மு சான், உம் பொண்ணு ஒத்துக்கிட்டா. உனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லியே. நான் சொன்னபடி கல்யாண சர்ட்டிபிகேட் கொண்டுவந்திருக்கியா? ரெண்டு பேரும் அத எடுங்க."

தனது தந்தை இடைவாரில் இருந்து எதையோ தேடி எடுப்பதை அய்கு கண்டாள். விறைப்பான வேலைக்காரன் திரும்பவந்து முதலாளியிடம் எதையோ ஆமை போல தட்டையாகசிறியதாக இருந்த ஒரு கருப்புப் பொருளைக் கொடுத்தான்.
ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறது என்று அய்கு பயந்தாள். தனது தந்தையை வெறித்துப் பார்த்தாள். அவர் ஊதா துணிப்பையை மேஜைமீது வைத்து திறந்து வெள்ளிப் பணஹ்களை வெளியே எடுத்தார்.

ஏழாவது முதலாளி, அந்த ஆமையின் தலைப்பக்கம் திறந்து, எதையோ தனது உன்னங்கையில் சிறிது கொட்டிவிட்டு, பழையபடி ஆமையை மூடி, விறைப்பான வேலைக்காரனிடம் திரும்பக் கொடுத்தார். பிறகு ஒரு விரலை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்து அதை தனது மூக்குத் துவாரங்களுக்குள் திணித்தார். அவளுடைய மூக்கும் மேல் உதடும் மஞ்சள் நிறமாக மாறிப் போயின. பிறகு தும்மல் போடுவது போல மூக்கைச் சுளித்துக் கொண்டார்.


1 2