• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-08 11:11:16    
வந்தே மாதரம்
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டிக்கு-மீனாட்சி பாளையம் கா அருண் எழுதிய கட்டுரை.

cri

இந்தியாவில் விற்பனையாகும் சீனத் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய மதிப்பு கொடுத்து சீனத் தயாரிப்புப் பொட்களையே வாங்குவது என உறுதி மொழி எடுத்தல். நான் உறுதிமொழி எடுப்பதோடு மட்டுமல்லாமல் எனது நண்பர்களையும் உறவினர்களையும் சீனத் தயாரிப்புப் பொருட்களின் நன்மையை எடுத்துக் கூறி அவர்களையும் சீனத் தயாரிப்புப் பொருட்களை வாங்க ஊக்கப்படுது.

சீன வானொலி வழியாக சீனாவைப் பற்றி நான் அறிந்து கொண்டவற்றை அதாவது சீனப் பண்பாடு சீனக் கலாச்சாரம் ஆகியவற்றை இந்திய மக்களிடம் பரப்பவேண்டும். அது மட்டுமல்லாமல் சீன வானொலி பற்றியும் பிரச்சாரம் செய்வதன் மூலம் சீனாவைப் பற்றி இந்திய மக்களிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தலாம்.

சீனாவை இந்தியாவின் போட்டி நாடாக இருதாமல் நட்பு நாடாக கருதும் மனப் பான்மையை மக்களிடம் ஏற்படுத்த முயல வேண்டும். வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்லும் வசதி வாய்ப்பு உள்ளவர்களிடம் சீனாவில் உள்ள சுற்றுலாத் தளங்களின் சிறப்பை எடுத்துக் கூறி அவர்களை சீனாவிற்கு சுற்றுலா செல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.

இரு நாட்டு அரசுகளும் செய்ய வேண்டியவை

இரு நாட்டு அரசு உயர் அதிகாரிகளும் அடிக்கடி இந்தியா மற்றும் சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு சீன இந்திய உறவை விவாதிக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இரு நாடுகளும் கூட்டு முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

முடிவுரை.

சீன இந்திய நட்புறவை வளர்ப்பதில் சீன வானொலி தமிழ் பிரிவும் பெரும் பங்கு ஆற்றுகின்றது. இனி வரும் காலங்களில் சீன இந்திய நட்புறவு பிரகாசமாக இருக்கும் என நம்புவோம்.


1 2