• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 10:32:25    
சீனாவின் பொது மக்களிடையில் தென்பட்ட நட்சத்திரங்கள்

cri

போட்டியின் போது

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், "super girl" என்றால், என்ன பொருள் என்பது சீனர்களுக்கு தெரியாது. தற்போது, "super girl" என்ற போட்டி, கனவை நிறைவேற்றும் மேடையை Shang Wen Jie போன்ற இளம் பெண்களுக்கு வழங்குகிறது. 2005ஆம் ஆண்டில் இப்போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்றவர்கள் ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளனர். முதலிடம் பெற்ற Li Yu Chun என்பவர், அமெரிக்காவின் TIME என்ற இதழின் ஆசியப் பதிப்புக்கான முகப்பு பெண்ணாக மாறியுள்ளார்.

"super girl" என்ற போட்டி, எண்ணற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர் Wang Wei கூறியதாவது

"2004ஆம் ஆண்டு முதல் நான் 'super girl' என்ற போட்டியைப் பார்க்கத் துவங்கினேன். சீனப் பெருநிலப்பகுதியில் பொது மக்களிடையில் தென்பட்ட நட்சத்திரங்கள் இல்லை. ஓரிரவுக்கு பின் புகழ்பெற்ற வாய்ப்பு மிகக் குறைவு ஆகியவை இந்த நிகழ்ச்சி வரவேற்கப்படுவதற்குக் காரணங்களாகும் என்று நான் கருதுகின்றேன். இளம் பாடர்களுக்கான பரிசுப் போட்டி போன்ற போட்டிகளின் வரையறை மிகவும் உயர்வு. ஆனால் 'super girl' என்ற போட்டி, உண்மையில் பொது மக்களுக்கான போட்டியாகும். பெண்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். மேலும், இளம் பெண்களின் குணாம்சங்கள் தட்டி எழுப்பப்பட்டுள்ளன. இந்தப் போக்கு முழுவதும் உணர்வுப்பூர்வமானது" என்றார் அவர்.

1 2 3 4