• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 10:32:25    
சீனாவின் பொது மக்களிடையில் தென்பட்ட நட்சத்திரங்கள்

cri

பெய்ஜிங்கில் வாழும் செல்வி Feng Yi இத்தகைய போட்டிகளை விரும்புகிறார். அவர் கூறியதாவது

"இத்தகைய போட்டிகளைப் பார்க்க விரும்புகின்றேன். அந்தப் பாடகர்கள் சாதாரண மக்களாக இருந்து நட்சத்திரங்களாக மாறுவதையும் அவர்களின் பாடல் திறன் வலுப்பட்டு வருவதையும் கண்டு, அவர்களின் மூலம் நட்சத்திரமாக மாற விரும்பும் தனது கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதைப் போல் உள்ளது" என்றார் அவர்.

அவர்கள் சொன்னதைப் போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்களது வயதாத்த நபர்கள் வெற்றி பெறுவதைக் கண்டு, ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். எனவே, 2004ஆம் ஆண்டில் "super girl" என்ற போட்டி தோன்றியது முதல், பொது மக்களிடையில் நட்சத்திரங்களைத் தெரிவு செய்யும் நிகழ்ச்சிகள் மிகவும் வரவேற்கப்பட்ட நிகழ்ச்சிகளாக மாறியுள்ளன. "super girl" என்ற போட்டியைத் தவிர, சீனாவின் தொலைக்காட்சி நிலையங்கள் பல இதைப் போன்ற போட்டி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. சீன மத்தியத் தொலைக்காட்சி நிலையத்தின் "சீனாவில் கனவு" என்ற போட்டி இவற்றில் அடங்கும்.

வயது, கல்வி தகைமை, குடும்பப் பின்னணி முதலியவற்றைப் பொருட்படுத்தாமல், இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள எவரும் பதிவு செய்ய முடியும். ஒருவரின் கலைத் திறன் வெளிப்பாடு தொடக்கத்தில் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தொலைக்காட்சியில் அரங்கேற்றப்படலாம். பின்னர், குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் அல்லது இணைய தளத்தில் வாக்களிப்பதன் மூலம் தாம் விரும்பிய போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்கின்றனர். பல சுற்று போட்டிகளுக்கு பின் இறுதியில் வெற்றி பெற்றவர் உண்மையான நட்சத்திரமாக மாறுவார்.

இறுதியில் வெற்றி பெறுவது நல்லது. ஆனால், வேறுபட்ட மக்களுக்கு இந்த போட்டி நிகழ்ச்சிகள் வேறுபட்ட முக்கியத்துவங்கள் வாய்ந்தவை. சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் "சீனாவில் கனவு" என்ற போட்டியின் ஒரு துவக்கத் தேர்வில், 60 வயதுக்கு மேலான தம்பதி இருவர் கலந்து கொண்டனர். பரிசைப் பெறுவதில் தமக்கு எண்ணமில்லை. மனைவியுடன் இணைந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்டு, அரங்கு தொடர்பான கனவை நிறைவேற்ற விரும்புவதாக கணவர் கூறினார். "super girl" என்ற போட்டியின் துவக்கத் தேர்வுகளில், 10 வயதுக்குள்பட்ட பெண் குழுந்தைகளும் 50, 60 வயதான மூதாட்டிகளும் அடிக்கடி காணப்படலாம். அவர்களைப் பொறுத்த வரையில், இத்தகைய தேர்வு போட்டியில் கலந்து கொள்வது, வாழ்க்கை அனுபவங்களில் ஒன்றாகும்.

1 2 3 4