• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 11:06:44    
தமிழ் மூலம் சீனம் பாடம் 72

cri

ராஜா......கலை. கடந்த வகுப்பில் முதல் முறையாக வாழ்க்கையுடன் சம்பந்தமான சொற்களை கற்றுக் கொண்டேன்.

கலை.......அப்படியானால் நீங்கள் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட 6 சொற்களை மறுபடி பேசலாமா?

ராஜா......மகிழ்ச்சியுடன் பேசுகின்றேன். பு தியன், பு, குய், பியன் யி, மைய், தை குய் லா.

கலை.......ஓ பரவாயில்லை. நன்றாக உச்சரிக்கிறீர்கள். சரி புதிய சொற்களை கற்றுக் கொள்வதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுகொண்ட உரையாடலை மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்வோம்.

ராஜா........நண்பர்களே தயாரா? எங்களுடன் சேர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

கலை....... நி ஹாவ். ச்செ லி ஸ் பு தியன்.

ராஜா.......வணக்கம். இங்கே துணி கடை இருக்கின்றது?

கலை......ச்சின் வென். நி யோ மைய் பு மா?

ராஜா.......நீங்கள் துணி வாங்க வேண்டுமா?

கலை........நி யோ மைய் ஜி மி பு?

ராஜா......எவ்வளவு மீட்டர் துணி நீங்கள் வாங்க வேண்டும்?

கலை......யோ மைய் லியூ மி பு.

ராஜா......நான் ஆறு மீட்டர் துணி வாங்குகின்றேன்.

கலை.......யி மி பு யோ தோ ஷௌ ச்சியன்?

ராஜா......ஒரு மீட்டர் துணிக்கு விலை என்ன?

கலை.......யி மி பு யோ ஷ் குவய் ச்சியன்.

ராஜா.....ஒரு மீட்டர் துணிக்கு பத்து யுவான்.

கலை.......தை குய் லா.

ராஜா......விலை மிகவும் அதிகம்.

கலை......பூ குய். நி யோ தோ ஷௌ மி பு?

ராஜா......விலை அதிகம் இல்லை. உங்களுக்கு எத்தனை மீட்டர் துணி வேண்டும்?

கலை........வோ யோ லியூ மி பு.

ராஜா.........எனக்கு ஆறு மீட்டர் துணி தேவை.

கலை...... ஹோ, சான் ஷ் குவய் ச்சியன் மைய் லியு மி பு.  வோ ஷௌ யோ வூ குவய் ச்சியன்.

ராஜா......சரி, ஆறு மீட்டர் துணிக்கு நான் உங்களிடம் 30 யுவான் கேட்கின்றேன். 5 யுவான் தள்ளுபடி தருகின்றேன்.

கலை......ஹோ வோ மைய் லா.

ராஜா......சரி நான் வாங்குவேன்.

கலை.......நண்பர்களே புதிய வகுப்பு துவக்குவதற்கு முன் இன்று கற்றுக் கொண்ட சொற்கள் பற்றி முதலில் கொஞ்ச விளக்கம் சொல்கின்றோம்.

ராஜா.........கடந்த முறை பு தியன் பற்றி கற்றுக் கொண்டோம். இது பற்றிய புதிய சொற்களை அதிகமாக சேர்த்தால் அந்நியர்கள் சீனாவில் வாழ்வதற்கு துணை புரியும் அல்லவா?

கலை......ஆமாம். உங்கள் விருப்பமும் நான் சொல்வதும் ஒரே மாதிரி உள்ளது.

ராஜா.......கலை அப்படியானால் நான் வினா கேட்கலாமா?

கலை.....கேளுங்கள்.

ராஜா.......தமிழ் நாட்டில் துணி கடைக்கு போனால் பட்டு துணி வாங்க வேண்டும் என்று பெண்கள் பெரும்பாலோர் ஆசைபடுகின்றார்கள். பட்டு துணி, பூத் தையல் துணி வெள்ளை துணி இவற்றை சீன மொழியில் எப்படி உச்சரிப்பது?

கலை........பட்டு துணி என்பதை ஸ் ஸோ என்று உச்சரிக்க வேண்டும். பூ தையல் துணி என்றால் சீன மொழியில் ஒரு எழுத்து மட்டும் தேவை. அதாவது குவா பு என்று பொருள்.

ராஜா......அப்படியானால் வெள்ளை துணியை பைய் பு என்று உச்சரிக்க வேண்டும்?

கலை.......ஆமாம். பைய் பு என்றால் வெள்ளைத் துணி என்று பொருளாகும்.

ராஜா.......பைய் என்றால் வெள்ளை. பு என்றால் துணி. சரி பைய் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டா?

கலை........உண்டு. பணத்தின் மதிப்பு பற்றி கூறும் போது பைய் என்று யி பைய் யுவான் ஆக பொருள்படுகின்றது.

1 2