• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-16 11:18:40    
திபெத் இனத்தின் 'கெசர் காவியம்'

cri

திபெத் இனத்தின் இந்த நீண்ட காவியம், சுமார் கி. பி. 11ம் நூற்றாண்டுக்கும் 12ம் நூற்றாண்டுக்குமிடையில் தோன்றியது. இது திபெத் இனத்தவர்கள் பலர் சேர்ந்து இயற்றிய ஒரு மாபெரும் வீர காவியமாகும். இது வரை, சுமார் 15 ஆயிரத்துக்கு மேலான எழுத்துக்களுடைய தரவுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், நாட்டுப்புறக் கதைப்பாடல் கலைஞர்களால் இக்காவியம் கையேற்றப்பட்டு பரவுகின்றது.

திபெத் இனத்தின் ஒரு புகழ் பெர்ற வீரர் கெசர், அரக்கனையும் பிசாசுகளையும் வென்றடக்க, தமது வாழ்நாள் முழுவதிலும் பல போர்களில் ஈடுபட்டு வந்ததன் மூலம் பொது மக்கள் அமைதியான வாழ்வை நடத்தச் செய்வது, "கெசர் காவியத்தின்" உள்ளடக்கமாகும் என்று சீனக் கதைப்பாடல் கலைஞர் சங்கத்தின் நிபுணர் Sonam Tsering தெரிவித்தார்.

"'கெசர் காவியம்' என்பது, தற்போது உலகில் மிக நீண்ட கதைப்பாடல் காவியமாகும். பண்டைக்கால திபெத் இனத்தின் சமூக வரலாறு, அரசியல், பொருளாதாரம், தேசிய இனத் தொடர்பு, மொழி, எழுத்துக்கள் பண்பாடு, கலை முதலியவற்றை ஆராயும் ஒரு கலைகளஞ்சியமாகும்" என்றார்.

திபெத் இனத்தவர்கள் குழுமிவாழும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் Si Chuan, Yun Nan, Qing Hai, Gan Su முதலிய மாநிலங்களின் ஒரு பகுதி வட்டாரங்களிலும் "கெசர் காவியம்" பாடும் தொழில் முறை நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். இந்தக் கதைப்பாடல் கலைஞர்களாலேயே, "கெசர் காவியம்" சீன மக்களிடையே சுமார் ஆயிரம் ஆண்டுகளில் பரவியுள்ளது. இக்கலைஞர்களில் சிலர், அடுத்தடுத்து பல பத்து தொகுதிகளில் இக்காவியத்தை பாட முடியும். பல பத்து நாட்கள் இக்கதைப்பாடல் நிகழும். இவ்வாண்டு 84 வயதான கதைப்பாடல் கலைஞர் சாங் சு என்பவர், இவர்களில் ஒருவராவார். 60க்கும் அதிகமான தொகுதிகளில் "கெசர் காவியம்" பாட முடியும்.
1922ம் ஆண்டு சாங் சு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வட பகுதியில் அமைந்துள்ள "Ru" எனப்படும் ஒரு கிராமத்தில் பிறந்தார். அவரது பாட்டனார் "கெசர் காவியம்" பாடும் ஒரு கலைஞராவார். பாட்டனார் கதைக்கும் போதெல்லாம், சாங் சு, அவரது அரவணைப்பில், சாய்ந்து மனநிம்மதியுடன் கேட்டார். இவ்வாறு, "கெசர் காவியம்" படிப்படியாக சிறு வயதிலிருந்தே சாங் சுவின் மனதில் ஆழப்பதிந்தது.

பின்னர், பாட்டனார் இயற்கை எழுதினார். "கெசர் காவியத்தை"க் கேட்க சாங் சுவுக்கு வாய்ப்பு இல்லை. பாட்டனாரின் மரணமும் "கெசர் காவியத்தின் மீதான" எதிர்பார்ப்பும் காரணமாக, சாங் சு, நாள் முழுவதிலும் மெளனம் சாதித்து துயரப்பட்டார். அவரது 11ம் வயதில் இந்நிலைமை மாறியது.

1 2