• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-16 11:18:40    
திபெத் இனத்தின் 'கெசர் காவியம்'

cri

ஒரு நாள் சாங் சு மலையில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கையில், திடீரென மழை பெய்யத்துவங்கியது. மலை துவாரம் ஒன்றிற்குள் நுழைந்து கற்பாறையைச் சார்ந்து தூங்கினார். அப்போது, பாட்டனாரின் வாய் மூலம் கேட்ட கெசர் மன்னர், சாங் சுவின் கனவில் தோன்றினார். சற்றுப்பின்னரே அவர் மீண்டும் மன்னரைக் கண்டார். இக்கனவில், சாங் சு "கெசர் காவியத்தை" கண்டுரசித்து வந்தார். கனவிலிருந்து விழிப்புற்ற போது, காவியத்திலுள்ள உள்ளடக்கங்கள் சாங் சுவின் மூளையில் நிறைய இருந்தன.

இதற்குப் பின், சாங் சு எங்கும் போய் "கெசர் காவியத்தை" கதைபாடத் துவங்கினார். திபெத்தின் வடபகுதியிலிருந்து கிழக்குப் பகுதி வரை செல்லும் இடமெங்கும் கதைபாடிக் கொண்டே இருக்கின்றார். 

"நான் போகும் இடத்திலெல்லாம் மன்னர் கெசரைப் பாராட்டி பாடுகின்றேன். மென்மேலும் மக்கள் என்னை வரவேற்று வருவதை நான் அறிந்து கொண்டேன். அனைவரும் எனக்கு கொடுக்கும் பணமும் அதிகரித்து வருகின்றது. சில முக்கிய பிரமுகர்கள், கதைபாடுமாறு என்னை அழைக்கத் துவங்கினர். 'கதைப்பாடல் கலைஞர்' என, அனைவரும் என்னை கூப்பிடுகின்றனர்"

காலட்போக்கில், சுற்றுப்புறங்களிலும் தொலைத்தூரத்திலும் "கெசர் காவியம்" கதைபாடும் புகழ் பெற்ற கலைஞராக சாங் சு மாறியுள்ளார். முழு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும் அவர் வரவேற்பு பெற்றுள்ளார்.

 

"கெசர் காவியம்" போன்ற இத்தகையத் தலைசிறந்த வரலாற்று காவியம் பரவச் செய்யும் வகையில், கடந்த சில ஆண்டுகளில், சாங் சு முதலிய செல்வாக்குடைய கதைப்பாடல் கலைஞர்கள், திபெத் பல்கலைக்கழகம், திபெத் சமூக அறிவியல் கழகம் உள்ளிட்ட, கல்வி அமைப்புகளில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டனர். அதே வேளையில், அவர்களுக்கு உறைவிட வசதியும் வாழ்க்கைக்கான உதவித்தொகையையும் தன்னாட்சிப் பிரதேச அரசின் தொடர்புடைய வாரியம் வழங்கியுள்ளது.

1980ம் ஆண்டு முதல், இது வரை, "கெசர் காவியம்", 30 தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கதைபாடல் கலைஞர்களால் இக்காவியம் பரவி வருவதன் காரணமாக, முதிய பலரின் மரணம், இக்காவியத்தைக் காப்பாற்றுதல், சரிப்படுத்தல் பணிக்கு கடும் இன்னல்களை ஏற்படுத்தியது. திபெத் தன்னாட்சிப் பிரதேச சமூக அறிவியல் கழகத்தின் கீழுள்ள தேசிய இன ஆய்வு துறையின் நிபுணர் Rigzin பேசுகையில்,

சாங் சு உள்ளிட்ட கதைப்பாடல் கலைஞர்கள் பாட வல்ல கதைகள் அனைத்தையும் பதிவு செய்து, அவற்றை எழுத்துக்களாக வெளியிடுவது எங்களின் உடனடிப்பணியாகும். 5 முதல் 8 ஆண்டுகளில் முதியோர் சாங் சு கதைபாடும் 60க்கும் அதிகமான கதைகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில், 27 நூல்களில் அவரது 25 கதைகளை வெளியிட்டுள்ளோம் என்றார்.

நீண்டகால வரலாற்று வளர்ச்சிப்போக்கில், திபெத் இனத்தவர்கள், தத்தமது புத்தி, விவேகம் மூலம் மிகவும் செழிப்பான பண்பாட்டுச் சொத்துகளை ஏற்படுத்தியுள்ளனர். இப்பண்டைக்கால பழஞ்பெரும் திபெத் கலையைப் பாதுகாத்து வெளிக்கொணர்வதற்கு பங்காற்றியுள்ளனர்.


1 2