• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-22 15:49:28    
சீன இந்திய நட்புறவு ஆண்டு
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் பொது அறிவுப் போட்டிக்கு புதுக்கோட்டை தி. பாஸ்கர் எழுதிய கட்டுரை.

cri

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நெங்காலமாகவே நல்லுறவு இருந்து வந்தது. இரண்டு தேசங்களேயும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக பௌத்த சமயம் விளங்கியது. வணிகத் தொடர்பும் நிலை பெற்றிருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு சீன கோமிங்தான் கட்சியின் தலைவர் சியாங் கே ஷோக் தன்னுடைய முழு ஆதரவையும் அறிவித்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின் கோமிங்தாங் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனாவில் உள்நாட்டு போர் நிகழ்ந்த போது இந்தியா நடுநிலை வகித்து சீனாவில் மாசேதுங் தலைமையில் சீன மக்கள் குடுயரசு நிறுவப்பட்ட பின் கம்யூனிஸ்ட் சீனாவில் முதலில் அங்கீகரித்தப்பட்ட கம்யூனிஸ்ட் இல்லாத நாடு இந்தியாதான். அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் அணியில் சீனாவும் உரிய இடம் தரப்பட வேண்டும் எந்று இந்தியாதான். இவ்வாறு சீனாவின் நலனில் அக்கறையுடன் இந்தியா விளங்கி வந்தது. இவ்வாறு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நட்புறவு உண்டானது.

கி.பி.6ம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு சீனத்துப் பெரியார் யுவான் சுவாங் அறிவுச் செல்வத்தையும் கலை செல்வத்தையும் பெற இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கி தாமும் கல்வி கற்றார். பிறருக்கம் கற்பித்தார். இந்திய மேலோர் யுவான் சுவாங் அவர்களுக்கு பௌத்த மதாச்சாரியார் பட்டத்தை வழங்கி மகிழ்வித்தனர். மாண்புமிகு இந்திய தலைமை 1979ம் ஆண்டு இந்தியாவின் ஜனதாக் கட்சியின் தலைவரான முராஜிதேசாய் அமர்ந்தார். அப்போது இந்திய சீன நல்லுறவைச் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருநாடுகளுக்கிடையே தூதரகங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவின் வெளிவியுறவு அமைச்சராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் சீனாவிற்குச் சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் 1988ல் இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி அவர்கள் சீனாவிற்குச் சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இருபெரும் இந்தியத் தலவைவர்களின் முயற்சியில் இந்திய சீன நல்லுறவு மீண்டும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா சீன நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. இந்திய சீன உறவைகள் மேம்படுவதின் அடையாளமாக ஹார்பின் நகரில் முதலாவது இந்திய வீதி அமைக்கப்பட்டுள்ளது. ஹெகுலான் ஜியாங் என்ற சீன வட கிழக்கு மாநிலத்தின் தலைநகர் ஹார்பின் இந்நகரில் இந்திய வீதி அமைக்கப்பட்டுள்ளது.

1 2