• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-22 15:49:28    
சீன இந்திய நட்புறவு ஆண்டு
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் பொது அறிவுப் போட்டிக்கு புதுக்கோட்டை தி. பாஸ்கர் எழுதிய கட்டுரை.

cri

இந்தியச் சாயல் கொண்ட முதலாவது தெரு ஒன்று ஹார்பின் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது சீன இந்திய உறவா மேம்படுத்தும். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் கலாச்சாரப் பரிமாற்றம் மக்களுக்கிடையேயான தொடர்புகள் அதிவேகமாக வளர்ச்சியடைவதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளதாக ஹார்பின் நகர கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் டுயுச்சி கூறியுள்ளார்.

டுயுச்சிங் மட்டுமில்லை. ஹார்பின்ா நகரமேயர் ஷிசோஙி்கின் கூட இதே கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஹாார்பின் சீனாவில் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்று இருதரப்புக்கும் பயனளிக்கக் கூடிய உறவுகளை உறுதிப்படுத்த ஹார்பின் நகரம் விரும்புகின்றது. இதில் சீனாவில் தொழில் புரிய விரும்பும் மென்பொருள் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. ஒரு கோடி மக்கள் வாழும் ஹார்பின் நகரில் இந்திய வீதி பிரபலமடைந்து வருகின்றது என்று கூறும் மேயர் ஹார்பின் நகரில் இந்திய முதலீடுகளை வரவேற்கின்றார்.

இந்திய வீதி இந்திய நிறுவனமான மீனா டிராவுல்ஸ் பிரைவேட்லிமிடெட்டும் ஒரு ஹார்பின் நகர சீனக் கம்பெனியும் இணைந்து அமைத்தது வீதி. ஹார்பின் நகர நிர்வாக உதவியோடு சில மாதங்களுக்கு முன் இந்த வீதி அமைக்கப்பட்டது. தற்போது சால்வைகள் பட்டுத் தரைவிரிப்புகள் துணிவகைகள், கைத் தெறிப் பொருட்கள் மற்றும் சில சாமான்களை விற்கும் இரு இந்தியக் கடைகள் இந்த வீதியில் உள்ளன. இந்திய வீதி நாங்காங் மாவட்டத்தில் உள்ளது. இத்தெருவில் சில சீனக் கடைகளும் ஆவாராஹின் என்ற இந்திய மதுக் கடையும் உள்ளன.

இந்திய உணவு வகைகளை சீன மக்கள் சுவைத்து மகிழும் வண்ணம் ஒரு இந்திய உணவு விடுதி இந்த வீதியில் விரைவில் தொடங்கப்படும். இந்திய திரைப் படங்களுக்கு சீனாவில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இங்குள்ள பனிப் பிரதேசங்களை பயன்படுத்திக் கொள்ள திரைப்படத்துறை அங்கு வரவேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது. இதனால் சீனா இந்திய மக்கள் உறவுகள் பெருகும் வாய்ப்பு உள்ளது. சீனப் பிரதமர் வென்ஜியாபவ் முதலாவது இந்திய சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2034 மில்லியன் டாலர்களை வழங்கிவரும் ஹார்பின் நகரம் இந்திய நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் என்று நம்பப்படுகின்றது. 2004ம் ஆண்டில் ஹார்பின் நகரிலிருந்து இரண்டு வியாபாரத் தூதுக்குழு மக்கள் இந்தியா சென்றனர். இதன் பயனாக இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு 10 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.


1 2