• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-23 15:22:06    
சிறுபான்மை தேசிய இன பிரதிநிதிகள் பற்றி

cri

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள, அண்மையில் நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பெய்சிங்கில் குழுமியிருந்தனர். அவர்களில் பலர், சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாவர். வண்ண வண்ண சிறப்பு நடையுடை பாவனை மிக்க தேசிய இன ஆடைகளால், அவர்கள், இதர பிரதிநிதிகளின் கவனத்தை கவர்ந்தனர். இன்றைய நிகழ்ச்சியில், பிரதிநிதிகள் இருவர் பற்றி கூறுகின்றோம்.

குய் சோ பிரதிநிதிக்குழுவில், வெள்ளி கழுத்துமாலை, வெள்ளி காதணி, உடுபபில் வெள்ளி நாடா என தன்னைத் தானே அலங்காரித்துள்ள பெண் பிரதிநிதி ஒருவர், பலரின் பார்வையை ஈர்த்துள்ளார். அவர் தென் மேற்குச் சீனாவின் குய் சோ மாநிலத்து ரி பிங் மாவட்டத்தைச் சேர்ந்த துங் இனப் பிரதிநிதி ஆவார். சூ வெங் ஜின் என்பது அவரது பெயர். குய் சோ ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் பட்டதாரியாகிய அவர், ஆசிரியராக இருந்தார். தற்போது, ரி பிங் மாவட்டத்தின் துணைத் தலைவர். 2003ம் ஆண்டு பத்தாவது தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அவருக்கு பெருமை தந்துள்ளது. ரி பிங் மாவட்டத்தின் முதலாவது பிரதிநிதி என்ற பெருமை, அவரைச் சாரும். இது பற்றி அவர் கூறியதாவது

"தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் உருண்டோடின. முன்பு பலவற்றை நான் அறிந்திருக்கவில்லை. பிரதிநிதியான பின், சட்டங்கள், சட்டவிதிகள், கொள்கைகள் தொடர்பான பலவற்றை அறிந்து கொண்டுள்ளேன். துங் இனத்தின் 26 லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தமை காரணமாக, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்" என்றார். தமது ஊர்வாசிகளுக்கு நன்மை ஏற்படுவதற்கென அவர் பாடுபடுகின்றார். தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தேசிய இனப் பிரதேசக் கட்டுமானம், தேசிய இனப் பண்பாட்டு பாதுகாப்பு முதலிய பிரச்சினைகள் பற்றி, கூட்டாக, அல்லது தனிநபர் என்ற முறையில் மக்கள் பேரவைக் கூட்டத்தொடர்களில் கருத்துரு, முன்மொழிவு தொடர்பான பத்துக்கு மேலான ஆவணங்களை சமர்ப்பித்தார். அவற்றில் பல, பெரிதும் கவனிக்கப்படுகின்றன. மக்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு முன், உள்ளூர்வாசிகள் பலர், தன்னைச் சந்தித்து, முன்மொழிவுகளை கூறி, பிரச்சினைகளை முன்வைத்தனர். அவற்றை கூட்டத்தொடரில் தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டனர் என்றார் அவர். இவ்வாறு "சு வெங் ஸின், உள்ளூர் மக்களின் பேச்சாளராக மாறியுள்ளார்" 
"பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நான், உள்ளூர்வாசிகளின் முன்மொழிவுகளை கூட்டத்தொடரில் தெரிவித்து, இன்னல்கள் மற்றும் பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அவற்றைச் சமர்ப்பித்த பிறகு, பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும். இது, பிரதிநிதியான எனக்கு மனநிறைவு தரும்" என்று அவர் கூறினார்.

மக்களுக்காக பேசுவது, மக்கள் பேரவையின் பிரதிநிதியின் கடமை. அதே கடமைக்குத் தோள்கொடுத்துள்ள பெண் பிரதிநிதி சுபுடா, மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்.

1 2