• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-23 15:22:06    
சிறுபான்மை தேசிய இன பிரதிநிதிகள் பற்றி

cri

வடக்குச் சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பாதியளவு வேளாண்மை பாதியளவு கால் நடை வளர்ச்சி என்ற நிலையிலுள்ள துங் லேங் நகரத்தின் ஒரு பட்டிணத்தில் அவர் வாழ்கின்றார். விவசாயிகள் மற்றும் ஆயர்களின் அன்பைப் பெற்றவர் என சுபுடா அழைக்கப்படுகின்றார். பட்டிணவாசிகளின் இத்தகைய நம்பிக்கையினால், 2002ம் ஆண்டு, தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, கூட்டத்தொடரில் கலந்து கொள்ள, ஊர்வாசிகள் தன்னை வழியனுப்புயதை என்றுமே மறந்து விடுவதில்லை என்றார், அவர்.

"அப்போது, அயலவர்கள் அனைவரும் வந்துசேர்ந்தனர். என்னை அனுப்பும் வாகனம் தொலைவில் சென்ற போதிலும், விட்டுப்போக அவர்களுக்கு மனமில்லை. நீண்டநேரமாக கையை அசைத்த வண்ணம் அங்கே நின்றிருந்தனர். பிரதிநிதியின் கடமையை செவ்வனே செய்து, மக்களின் விருப்பத்தை ஆக்கப்பூர்வமாக தெரிவித்து, ஊர்வாசிகளுக்கு நன்மை தரும் பணி புரிய வேண்டும் என, அப்போது முதல் நான் மன உறுதிபூண்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளில் சுபுடா முன்வைத்த பல முன்மொழிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு, அவர் முன்வைத்த, ஊரில் பள்ளிகளின் கற்பிப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றிய முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. புத்தம் புதிய கல்விசாலைக் கட்டிடம் ஒன்று 2006ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு இயங்கத் துவங்கியது. 2005ம் ஆண்டில், துங் லேங் நகரத்தின் லு பை பட்டினத்தில் சிறிய ரக நீர்த்தேக்கத்தை அமைப்பதென்ற முன்மொழிவையும் அவர் முன்வைத்தார். இத்திட்டப்பணி, சிறிய ரக நிர்மாண திட்டப்பணி என்பதால், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொடர்புடைய வாரியம், அதன் நடைமுறையாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்போது அரசின தொடர்புடைய பிரிவு அவருக்கு பதிலளித்தது. இதை அறிவித்ததும், உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை மூலம், தொடர்புடைய வாரியத்திடம் இந்நிலைமையை தெரிவித்து, பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தன்னாட்சிப் பிரதேசத்தின் நீர் வளத்துறை, இதற்கு மிகுதியும் கவனம் செலுத்தியது. இன்று இந்த சிறிய ரக நீர்த்தேக்கம், இயங்கவுள்ளது. சுபுடா இதனால் மனநிம்மதி அடைந்தார்.

"அநேக விவசாயிகளும் ஆயர்களும் என்னிடம் தெரிவித்த விருப்பங்கள் பல, நனவாகியிருப்பதைக் கண்டு நான் இதயப்பூர்வமாக மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக, ஊரின் குழந்தைகள், கட்டிடத்தில் கல்வி பெறுவது, எனக்கு பெருமை தந்துள்ளது" என்றார்.

பொது மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதைக் கண்டு மக்கள் பேரவை பிரதிநிதிகள் மிகவும் ஆனந்தமடைந்துள்ளனர். இவ்வாண்டின் தேசிய மக்கள் பேரவைக்கூட்டத்தொடர், நடப்பு மக்கள் பேரவையின் கடைசியான கூட்டத்தொடராகும். சு வெங் ஜின், சுபுடா ஆகிய இருவரும், தத்தம் முதுகிலுள்ள கடமை, மேலும் பளுவானதை உணர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் மூலம், மிகப் பரந்த சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் காணப்படும் மாற்றங்களை மக்கள் மேலும் உணர்ந்து கொண்டுள்ளனர்.


1 2