• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-26 14:36:09    
வறிய விவசாயிகளுக்கு நன்மை தரும் மிக குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமை

cri
கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் சில மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த கிராமங்களில் மிகக் குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமை சோதனை முறையில் நிறுவப்பட்டுள்ளது. கிராமங்களில் ஊனமுற்றோர், முதியோர், உழைப்பு ஆற்றல் இழந்தோர், மோசமான வாழ்க்கை நிலைக்குள்ளாகியோர் முதலிய ஏழைகளின் உணவு மற்றும் உடைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியளிப்பதே அதன் நோக்கம் ஆகும். இவ்வாண்டு முதல் சீனாவின் அனைத்து கிராமங்களிலும் இம்முறைமை நடைமுறைப்படுத்தப்படும். சுமார் 90 கோடி சீன விவசாயிகள் இதன் மூலம் என்ன பயன் பெறுவார்கள் என்பது பற்றி இன்றைய கட்டுரையில் அறிமுகப்படுத்துகிறோம்.

இவ்வாண்டு 48 வயதாகும் wang dian ying என்பவர், சீனாவின் கிராமங்களில் நடைமுறைக்கு வந்த மிக குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமையினால் பயன் பெற்றுள்ளவர்களில் ஒருவராவார். லியௌநிங் மாநிலத்து benxi நகரைச் சேர்ந்த xiabao கிராமவாசியான அவருடைய கணவர் கீல் வாத மூட்டு அழற்சி, சுவாசப்பை வீக்கம் ஆகிய நோய்களால் அல்லல்பட்டு, உழைப்பு ஆற்றலை இழந்தார். தவிர, அவருடைய 2 குழந்தைகள் பள்ளியில் பயில்வதால், குடும்பத்தினர்கள் வறிய வாழ்க்கையை நடத்துகின்றனர். இதை அறிந்துகொண்ட உள்ளூர் அரசு, அவருடைய குடும்பத்தை மிகக் குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமையில் சேர்த்துள்ளது. திங்கள்தோறும் 90 யுவான் வாழ்க்கை உதவித் தொகை வழங்கப்பட்டதன் காரணமாக, அவர்களுடைய வாழ்க்கைச் சிக்கல் தணிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது,

கடந்த கால வாழ்க்கையில் இன்னல்கள் நிறைந்து காணப்பட்டன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் உணவு எண்ணெய், உப்பு முதலியவற்றை வாங்குவதற்குப் பணமில்லை. இந்த 90 யுவான் உதவித் தொகை எங்கள் குடும்பத்தினர்களுக்குப் பேருதவியளித்துள்ளது. இப்பணத்தைக் கொண்டு நோய்வாய்ப்பட்ட கணவருக்கு மருந்து வாங்கித் தரலாம் என்றார் அவர்.

Benxi நகரைச் சேர்ந்த Benxi வட்டத்தில் இன்னும் 3000க்கும் அதிகமான குடும்பங்கள் wang dian ying போல, கிராமங்களில் மிக குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமையினால் பயன் பெற்றுள்ளன. wang dian ying வசிக்கும் லியௌநிங் மாநிலம், இந்த முறைமை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களில் ஒன்றாகும். 2004ஆம் ஆண்டில், மாநிலத்திலுள்ள அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை நிலைமை பற்றி லியௌநிங் மாநிலம் கள ஆய்வு மேற்கொண்டது. அதிகமான வறிய விவசாயிகள், வறிய வாழ்க்கை ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இம்மாநிலத்தில் மேற்கூறிய முறைமை நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் திங்கள் இறுதி வரை, இம்மாநிலத்தில் மேற்கூறிய முறைமையில் சேர்க்கப்பட வேண்டிய வறிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது இம்மாநிலத்தின் மொத்த விவசாய மக்கள் தொகையில் 3 விழுக்காடாகும்.

1 2