லியௌநிங் மாநிலம் போல, மத்தியக் கிழக்குச் சீனாவின் சியாங்சி மாநிலத்திலும் இந்த முறைமை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நான்காங் நகரம், சியாங்சி மாநிலத்தில் இந்த முறைமை முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றாகும். உள்ளூர் வாரியங்கள் வீடு வீடாகச் சென்று வறிய மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமையை அறிந்துகொண்டு, குடும்பத்தின் மொத்த வருமானத்தைக் கணக்கீடு செய்தன. தற்போது கிராமங்களிலுள்ள வறிய மக்கள் தொகையில், உழைப்பு ஆற்றல் இழந்தோரும் இன்னல் மிகுந்த வாழ்க்கை நடத்துவோரும் முக்கிய இடம்பெற்றுள்ளனர். இதனால், மிக குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியவர்களை வரையறுப்பது கடினமாக உள்ளது. வீடு வீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்வது என்பது மேலும் அதிகமான வறிய மக்கள் இதன் மூலம் நன்மை பெறத் துணை புரிகிறது. இவ்வாண்டு 35 வயதாகும் he dong hua என்பவர் jiang xi மாநிலத்து நான்காங் நகரைச் சேர்ந்த ஹுவாசான் கிராமவாசியாவார். சிறு வயதில் நோய்வாய்ப்பட்டதால் இரு கைகளின் தசை சுருங்கி, ஊனமுற்றவராக மாறினார். வாழ்க்கையில் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளன.
இதை அறிந்துகொண்ட உள்ளூர் அரசு, அப்போது முதல் அவருக்கு விவசாயிகளின் மிகக் குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாதம் அளித்து, திங்கள்தோறும் 90 யுவான் உதவித்தொகை வழங்கிவருகின்றது. he dong hua எமது செய்தியாளரிடம் கூறியதாவது, சமுதாயம் நியாயமற்றது என முன்பு கருதினேன். ஆனால், தற்போது, அரசு எப்பொழுதும் என் மீது அன்பு காட்டுவது என்பது, தொடர்ந்து வாழ வேண்டும் என்ற துணிவை எழுப்பியுள்ளது என்றார் அவர்.
அண்மையில் பெய்ச்சிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் சமர்ப்பித்த அரசுப் பணியறிக்கையில் கூறியதாவது, இவ்வாண்டு, முழு நாட்டிலுமுள்ள கிராமங்களில் மிகக் குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமையை நிறுவ வேண்டும். வேளாண்மை, கிராமம், விவசாயி ஆகியவற்றுடன் தொடர்புடைய பணிகளை வலுப்படுத்தி, இணக்கச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு மற்றொரு முக்கிய நடவடிக்கையாக இது விளங்குகிறது என்றார் அவர். ஆனால், சீனாவின் கிராமங்களில் கோடானு கோடி வறிய மக்கள் வாழ்கின்றனர். கிராமங்களில் மிகக் குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமையின் நடைமுறையாக்கத்தில் இன்னும் பல இன்னல்கள் நிலவுகின்றன. சீனப் பொதுப் பணித் துறை அமைச்சர் li xue ju எமது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய 3 பிரச்சினைகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது,
ஒன்று, நடுவண் அரசும் உள்ளூர் அரசுகளும் நிதியுதவியை மேலும் அதிகரிக்க வேண்டும். இரண்டு, மிகக் குறைந்த அளவு வாழ்க்கைச் செலவு உத்தரவாத முறைமையை மேலும் முறைப்படுத்தி, முழு நாட்டிலும் இந்த முறைமைக்கு நன்கு வழிகாட்டக் கூடிய ஆவணமொன்றை வரைய வேண்டும் என்றார் அவர்.
கிராமங்களில் இத்தைகைய முறைமையை நடைமுறைப்படுத்துவது என்பது, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் கிராமங்களில் சீரான நிலைமையைப் பேணிக்காக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கையாகும். சீனாவில் சமூக உறுதியளிப்பு முறைமை முன்னேற்றம் அடைந்துள்ளதை இது கோடிட்டுக்காட்டியுள்ளது. சமூக உத்தரவாத முறைமையின் சீர்திருத்தத்துடனும் முழுமையாக்கத்துடனும் சீன மக்களின் வாழ்க்கை மென்மேலும் மேம்படுத்தப்படும் என நம்புகின்றோம். 1 2
|