• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-28 10:53:13    
சீனாவில் முதியோரின் இன்பமான வாழ்க்கை

cri

130 கோடி மக்கள் தொகை கொண்ட சீனா, உலகளவில் முதுமை மயமாக்க வேகம் மிக அதிகமான நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது. சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 14 கோடியே 40 லட்சத்தை எட்டியுள்ளது. ஆசியாவின் முதியோர் தொகையில் இது 50 விழுக்காடு வகிக்கிறது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடி அதிகரிக்கும். முதியோரின் உடல் மற்றும் உள நலத்துக்கு உத்தரவாதம் தந்து, அவர்களை அமைதியாகவும் இன்பமாகவும் வாழச் செய்வது என்பது, சீனச் சமூகத்தின் பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையாகும். சீன அரசு தீர்த்து வரும் பிரச்சினையும் இதுவாகும்.

சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், வேலை வாய்ப்பு பெறுவதில் ஏற்பட்ட நிர்பந்தமும் பெரியதாகி வருகிறது. இவ்விரு காரணிகள் கூட்டாக ஏற்படுத்தும் விளைவாக, மேலதிக முதியோர்கள் தனியாக வாழ வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அவர்களின் குழந்தைகள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுவதால், அவர்களைப் பராமரிக்க நேரம் இல்லை. வயதாகி இருப்பதால், இந்த முதியோர்களின் வாழ்க்கையில் இன்னல்கள் அதிகம். இந்த நிலைமையில், முதியோர் இல்லம் உள்ளிட்ட சேம நல நிறுவனங்கள், சீனாவில் முதியோர்கள் பலர் தங்களது முதுமைக் காலத்தை கழிக்கும் இடங்களாக மாறியுள்ளன.

இப்போது நீங்கள் கேட்டு கொண்டிருப்பது, சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜியாங் சி மாநிலத்து சாங் ரௌ நகரின் சாங் சிங் முதியோர் இல்லத்தின் தலைவர் செங் சியூ லான் அம்மையார் மற்றும் ஒரு மூதாட்டியின் குரல். முதியோர் இல்லத்தின் தலைவர் அந்த மூதாட்டியிடமிருந்து செ ஜியாங் மாநிலத்தின் வட்டார மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த மூதாட்டி ஒரு திங்களுக்கு முன் இங்கு வந்து வாழத் துவங்கினார். நினைவிழப்புsenile dementia நோயினால் அவர் மனநிம்மதியின்றி அடிக்கடி தொல்லை கொடுப்பார். அவருடன் அன்பாகப் பழகுவதற்காக, செங் சியூ லான் முன்முயற்சியுடன் அவரிடமிருந்து வட்டார மொழியைக் கற்றுக் கொண்டார். இந்த முதியோரின் நம்பிக்கையையும் வரவேற்பையும் அவர் படிப்படியாகப் பெற்றுள்ளார்.

முதியோரின் இன்பம், முதியோர் இல்லத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாகும் என்று செங் சியூ லான் கூறினார். அவர் மேலும் கூறியதாவது--

"முதியோர் லட்சியத்துக்காக தொண்டாற்றி வருகின்றேன். முதியோரின் சிரிப்பைக் கண்டு நானும் சிரிப்பேன். முதியோர்கள் மகிழ்ச்சி அடைந்தால் நானும் மகிழ்ச்சி அடைவேன்" என்றார் அவர்.

சாங் சிங் முதியோர் இல்லம் போன்ற முதியோருக்கான சேம நல நிறுவனங்கள் சீனாவின் நகரங்களிலும் கிராமங்களிலும் சுமார் 40 ஆயிரம் உள்ளன. மொத்தம் 15 லட்சம் படுக்கைகள் உள்ளன. ஆனால், 14 கோடியே 40 லட்சம் முதியோர் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இத்தகைய சேம நல நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. முதியோர்கள் பலர் தங்களது வீட்டில் வாழ வேண்டியிருக்கிறது. வயதாகிய தம்பதி ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தே வாழ வேண்டியிருக்கிறது. தமது வாழ்க்கைத் துணைவர் காலமாகினால், அவர் மேலும் தனிமையாகி விடுவார்.

79 வயதான மூதாட்டி சாங் யூ சேங், சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள சி ஜியா ச்சுவாங் நகரில் வாழ்கின்றார். 10க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன், தமது கணவர் காலமாகிய பின், அவர் தனியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். அன்றாட வாழ்க்கையிலான பல வேலைகள் அவருக்கு கடினமானவை.

1 2