ஆனால், கடந்த ஆண்டில் மூதாட்டி சாங் வாழும் குடியிருப்புப் பகுதியில் Yi Yang Yuan என்ற முதியோருக்கான சேவை மையம் நிறுவப்பட்டது. காய்கறிகளை வாங்குவது, மருந்துகளை அனுப்புவது உள்ளிட்ட சேவைகளை அது முதியோருக்கு வழங்குகிறது. இதனால், மூதாட்டி சாங்கின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. இது பற்றி மூதாட்டி சாங் கூறியதாவது—
"இப்போது Yi Yang Yuan மையம் என்னை பராமரிக்கிறது. நல்லது தான். அனைத்தும் வசதியாக உள்ளன" என்றார் அவர்.

முதியோரின் வீட்டுக்குச் சென்று சேவை புரியும் இந்த புதிய வழிமுறை, தற்போது சீனாவின் பல்வேறு நகரங்களில் பரவல் செய்யப்பட்டு வருகிறது. வீட்டிலே இருந்தபடி முதியோரைக் கவனிப்பது என்ற சேவை, அடிப்படையில் சொந்தமாக வாழ்க்கை நடத்தும் அதே வேளை, ஓரளவில் பராமரிப்பு தேவைப்படும் முதியோருக்கு வழங்கப்படுகிறது. முதியோர்கள் திங்களுக்கு குறைவான கட்டணத்தைச் செலவிட்டால், பல வகை சேவைகளைப் பெற முடியும். மருந்துகளையும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களையும் வாங்குவது, ரத்த அழுத்தத்தை அளவிடுவது, குறிப்பிட்ட காலச் சந்திப்பு முதலியவை இந்தச் சேவைகளில் அடங்கும். அரசு, சமூகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளுடன், முதியோர் மீது அக்கறை மற்றும் அன்பு காட்டும் பணி, பெரும் வளர்ச்சி காண முடியும் என்று Yi Yang Yuan மையத்தைத் துவக்கிய சௌ யூ கே அம்மையார் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"முதியோருக்கான சேவை, பெரும்பாலான முதியோர்களின் தேவையை நிறைவு செய்ய வேண்டும். வேறுபட்ட வயதான, வேறுபட்ட நிலையிலான முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்ய, பல்வகைச் சேவைகளை வழங்க வேண்டும். அரசு வாரியங்களின் ஆதரவுடனும், தனியார் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஆற்றலுடனும், அனைவரையும் பங்காற்றச் செய்யுமாறு அணி திரட்டினால், முதியோருக்கான லட்சியம் செவ்வனே நிறைவேற்றப்படும்" என்றார் அவர்.
தவிர, கடந்த சில ஆண்டுகளில், முதியோரின் மனநிலைக்கு மேலும் பெரும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அன்பு குறைவினால் ஏற்பட்ட தனிமையிலிருந்து முதியோர்களை விடுவிக்க, சீனாவின் பல்வேறு இடங்கள் பாடுபட்டு வருகின்றன.
சீனாவின் வட பகுதியின் கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தியான் ஜின் மாநகரின் Tai Da பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில், அரசின் ஆதரவுடன் நிறுவப்பட்ட முதியோர் சங்கம், பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் பல்வகைக் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. தற்போது, 1000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தச் சங்கத்தில் உள்ளனர். இச்சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில், இந்த வளர்ச்சி மண்டலத்தில் வாழும் 95 விழுக்காட்டுக்கு மேலான முதியோர்கள் கலந்து கொண்டனர். மேலும், மிதி வண்டி அணி, மேசை பந்து அணி, பாடல் குழு, ஆடல் குழு, மாடல் அழகி அணி, நிழற்படக் கலை அணி முதலிய குழுக்களை இந்த முதியோர் சங்கம் உருவாக்கியுள்ளது. முதியோர்களின் வாழ்க்கை இதனால் செழிப்பாகி வருகிறது. 1 2
|