• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-29 17:54:52    
பெய்ஜிங் ஒலிம்பிக் தொண்டர்கள் சேர்க்கும் பணி

cri
ஒரே உலகம், ஒரே கனவு என்பது 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தலைப்பாகும். உலகில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆர்வம் கொள்ளும் ஒவ்வொருவருக்கும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வாய்ப்பு உண்டு என்பது இது பொருட்படுகின்றது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாததாலும், தொண்டர் என்ற முறையில் மக்கள் இதில் பங்கெடுக்கலாம்.

நேற்று பிற்பகல், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி செய்தியாளர் கூட்டம் நடத்தி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு சீனப் பெருநிலப்பகுதியைத் தவிரந்த பிரதேசங்களிலிருந்து தொண்டர்களைச் சேர்க்கும் பணி அதிகாரப்பூர்வமாகத் துவங்கியதாக அறிவித்தது. நேற்று முதல், ஹாங்காங், மக்கௌ, மற்றும் தைவான் உடன்பிறப்புகளும், வெளிநாடுகளில் வாழும் சீனர்களும், வெளிநாட்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் துணை நிர்வாகத் தலைவரும், பெய்ஜிங் ஒலிம்பிக் தொண்டர்கள் பணிக் குழுவின் துணைத் தலைவருமான Li bing hua செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது,

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொண்டர்கள் சேர்க்கும் பணி துவங்கியுள்ளது. பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த அடிப்படை நிபந்தனைகளைக் கொண்ட பிரமுகர்கள் விண்ணப்பம் செய்து, பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்குச் சேவை புரிவதை வரவேற்கின்றோம் என்றார் அவர்.

ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகளும், வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் முறையே, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் சிவில் விவகார பணியகம், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச விளையாட்டு வளர்ச்சி பணியகம், பெய்ஜிங்கில் அமைந்துள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் தைவான் உடன்பிறப்பு தொண்டர்கள் சேர்க்கும் மையம், பெய்ஜிங்கில் அமைந்துள்ள வெளிநாடுகளில் வாழும் சீனர் தொண்டர் சேர்க்கும் மையம் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம். வெளிநாட்டவர்கள், பெய்ஜிங்கிலுள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் வெளிநாட்டுத் தொண்டர்கள் சேர்க்கும் மையத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்த அமைப்புகள் ஏற்றுக்கொள்ளும் இணையத்திலும் விண்ணப்பம் செய்யலாம். மே திங்களில், தொண்டர்கள் சேர்க்கும் பணி முற்றிலும் நிறைவடையும்.

1 2