
அந்நிய மொழி பேசும் தொண்டர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். தற்போது, சில குறிப்பிட்ட மொழிகள் பேசும் தொண்டர்கள் மிகக் குறைவு. ஆகையால், மொழி தனிச்சிறப்பு கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் ஆக்கப்பூர்வமாக விண்ணப்பம் செய்ய பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி விருப்பம் தெரிவித்துள்ளது. சீன மொழியையும் அந்நிய மொழியையும் நன்றாகப் பேச கூடிய விண்ணப்பிப்பவர்களை முதலில் சேர்க்கப்படுவர். பெய்ஜிங் ஒலிம்பிக் தொண்டர் பணிக் குழுப் பணியகத்தின் தலைவர் Liu jian கூறியதாவது,
பெய்ஜிங்கிற்கு வந்து சேவை பணி புரிய வேண்டுமானால், முதலில் சீனர்களுடன் சாதாரன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது அனைவருக்கும் புரிக்கின்றது. அதேவேளையில், வெளிநாட்டு நண்பர்களுக்கும் சேவை புரிய வேண்டும். ஆகையால், சீன மொழியிலும் அந்நிய மொழியிலும் பேசும் திறன் முக்கியமானது என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளின் போது, சுமார் ஒரு இலட்சம் தொண்டர்கள் போட்டிகளுக்குச் சேவை புரிவர். சீனத் தொண்டர்களைச் சேர்க்கும் பணி, கடந்த ஆண்டின் ஆக்ஸ்ட் திங்கள் முதல் துவங்கியது. முக்கியமாகப் பெய்ஜிங்கிலுள்ள உயர் நிலை பள்ளிகளிலிருந்து தொண்டர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
தொண்டர்கள் அனைவருக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி உரிய பணி உத்தரவாதம் அளிக்கும். தவிர, சிறப்பாகச் சேவை புரியும் தொண்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
2008ம் ஆண்டு, தொண்டர்களின் சிலிப்பு பெய்ஜிங்கின் தலைச்சிறந்த பெயர் அட்டையாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறும் போது, இந்த சிலிப்பு அனைத்துலகத்திலிருந்து வர வேண்டும் என்று விரும்புகின்றோம். 1 2
|