2006ம் ஆண்டை நட்புறவு ஆண்டாக அனுசரிக்க இந்தியாவும் சீனாவும் முடிவெடுத்துள்ளதை மண மகிழ்ச்சியோடு நான் வரவேற்கிறேன். இந்த நட்புறவு ஆண்டு இரண்டு நாட்டு மக்கலுக்கும் ஓர் அரிய வரப்பிரசாதமாகும். 2006ம் ஆண்டை நட்புறவு வழியில் என்னால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு விளக்கி கூறுகிறேன்.
நட்புறவு
இந்தியாவும் சீனாவும் நட்பு பாதையில் வீறு நடைபோட வேண்டுமானால் நான் சில யோசனைகளை முன் வைக்கின்றேன். இந்தியாவும் சீனாவும் கடந்த கால கசப்புணர்வுகளை அறவே மறந்து விட வேண்டும். சிக்கிம் அருணாசலப் பிரதேசம் எல்லை பிரச்சினை பற்றி உயர் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமைச்சர் அளவில் முதல் கட்ட பேச்சுவார்த்தையும் பிறகு வெளியுறவு செயலர்கள் தலைமையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தி தீர்வு காண வேண்டும். சர்வதேச பிரச்சினைகளான பயங்கரவாதம் போதைப் பொருள் கடத்தல், கைதிகளை விடுதலை செய்தல் போன்ற பிரச்சினைகளை பற்றி வல்லுந ர்களை வைத்து குழு அமைத்து தீர்வு காண வேண்டும்.
இரு நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் சென்று வர விசா எளிதில் கிடைக்கும் படியாக வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி சமூக வளர்ச்சி ஏற்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கல்வி துறையில் மாணவர்களை அந்தந்த நாடுகள் இந்தியாவில் சீன மாணவர்களை கல்வி கற்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சீனாவில் இந்திய மாணவர்களை கல்வி கற்க முன்னுரிமை அளிக்க வேண்டும.் இதன் மூலம் பரஸ்பரம் மேலும் வலுவூட்டப்படுகின்றது. இவ்வாறு செய்தால் நட்புறவு மேலும் தழைந்தோங்கும் என்பகதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. நான் மேலே கூறிய தகவல்களை இந்திய நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தெரிவிப்பேன். நண்பர்கள் மற்றும் பொது மக்களிடம் விளக்கி எடுத்துரைப்பேன். நட்புறவு வளர நான் சீன மொழியையும் கற்றுக் கொண்டு வருகிறேன். மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க என்னை தயார்படுத்தி வருகின்றேன்.
நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும்
2006ம் நட்புறவு ாண்டில் நான் என்ன செய்ய முடியும் என்பது பற்றி இங்கே ஆராய்ந்து கூறுகிறேன். சீன மக்கள் இந்திய மொழிகளான தமிழ் இந்தி தெருங்கு மற்றும் வங்காள மொழிகளை கற்க வேண்டும். மொழியைக் கற்றுக் கொண்டால் கலாச்சாரம் பெருக்கும். நல்ல நட்புறவு கிடைக்கும். இந்தியாவும் சீனாவும் மக்கள் தொகையில் உலகளவில் இருபெரும் வல்லரசு நாடு. இதே போல் பொருளாதாரத்தில் வல்லரசாக மாற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னுடைய கருத்தைத் தெரிக்கிறேன். இந்தியாவும் சீனாவும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் சமூதாய வளர்ச்சியை வேகப்படுத்துதல்லே இதனுடைய முக்கியமான அம்சமாகும். அறிவியலும் தொழில் நுட்பமும் ஆக்கப்பூர்வமான ஆதார சக்திகள். பொருளாதார சமூதாய வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் மகத்தான புரிட்சிகர ஆற்றலின் பிரதிநிதிகளாக அறிவியலும் தொழில் நுட்பமும் செயல்படுவதால் சீனாவும் இந்தியாவும் இத்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் உடனடி பொருளாதாரத்திற்கும் தொழிற்துறை மற்றும் வேளாண் உற்பத்தி பெருக்குவதற்கும் மக்கள் தொகை சுற்றுச் சூழல் இயற்கை பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்வதற்கும் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களை இரு நாடுகளும் கண்டிப்பாக கையாள வேண்டும். இப்படி அனைத்து விதத்திலும் சீன இந்திய நட்புறவு வளர நான் அனைத்து முயர்சிகளையும் என்னால் செய்ய முடிந்தவற்றை கண்டிப்பாக செய்வேன்.
1 2
|