உள்நாட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல்
இந்தியாவும் சீனாவும் ஒர் குறிப்பிட்ட ஆண்டு நிர்ணயித்து அதற்குள் வலுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பொருளாதாரத்தில் விரைவாகவும் திடமானதாகவும் கட்டி உயர்த்த வேண்டும். தற்போதைக்கு சீனாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 10 விழுக்காடாகும். மேலும் இதன் வளர்ச்சி 15 விழுக்காடு அதிகப்படுத்துதல் வேண்டும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 8 விழுக்காடாகும். இதனை 15 விழுக்காடு அதிகப்படுத்த வேண்டும். இதற்கு உள்கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்துதல் வேண்டும். நீர் ஆதாரத்தை பெருக்க இரு நாடுகளும் நதிகளை இணஐக்க வேண்டும். இதன் மூலம் தரிசு நிலங்களை பொன் விளையும் பூமியாக மாற்றலாம். விவசாயம் விவசாயிகள் மேம்படுவார்கள்.
தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியாவும் சீனாவும் உலகில் முன்னணி நாடாக எதிர்காலத்தில் வரவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நவீன உள்நாட்டமைப்பில் தொலை தகவல் தொடர்போ எந்தவொரு போட்டி பொருளாதாரத்திற்கும் உயிர் நாடி ஆகும். உலக வணிகத்தில் இந்தியா சீனா பங்கு அதிகரிக்கும். உலகிலேயே பல புதிய தகவல் தொழில் நுட்பங்கள், கணிணி மென்பொருள்களை உருவாக்கும் உயிர்நாடியாக இந்தியாவும் சீனாவும் பரிணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இனிவரும் ஐம்பது ஆண்டுகளாவது இந்தியா சீனாவிற்கான விரிவான தொலை நோக்கு காலகட்டமாக அமையட்டும். நமது திறமையில் புதிய தன்னம்பிக்கை வைத்து இணைய சமுதாயத்திற்கை புதிய பாதை அமைத்து இந்திய சீனாவை பார்ப்போம். ஆரோக்கியமான இந்திய சீனாவை உருவாக்குவோம் என்று இந்த நட்புறவு ஆண்டில் சபதம் ஏற்கிறேன்.
நீண்ட தொலை நோக்கு பார்வை
இந்தியாவும் சீனாவு் 2025ம் ஆண்டுக்குள் மாபெரும் வல்லரசாக மாற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். முதலில் உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் தன்னிரைவு அடையும் வரை உள்கட்டமைப்பை மேம்படுத்தி சீரான வளர்ச்சியான இந்திய சீன தேசத்தினை கட்டி எழுப்ப வேண்டும். ஆசிய நாடுகளுக்கெல்லாம் சீனாவும் இந்தியாவும் எழுப்ப வேண்டும். ஆசிய நாடுகளுக்கெல்லாம் சீனாவும் இந்தியாவும் தலைமை ஏற்று ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மாநாடு நடத்த வேண்டும். தடைலில்லா வர்த்தகத்தை ஏற்படுத்த வேண்டும். ஆசிய நாடுகள் அனைத்துமே நட்பு நாடுகளாக மலரும் மக்கள் தொகையில் சீனாவும் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. இந்த இரு நாடுகளும் மனித சக்தியை முழுமையாக பயன்படுத்தினால் அனைத்து துரைகளிலும் வல்லரசாக மாறும். பொருளாதார ரீதியில் இரு நாடுகளும் சேர்த்து செயல்பட்டால் நட்புறவு தொடர்ந்து நீடிக்கும். மக்களிடையே சகோதரத்துவ மனப்பான்ை உருவாகும். நாட்டு மக்களையும் யாராலையும் பிரக்க முடியாது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. இந்தியாவும் சீனாவும் 2006ம் ஆண்டு நட்புறவு ஆணஅடாக மட்டுமில்லாமல் இனிவரும் அனைத்து ஆண்டுகளும் நட்புறவு ஆணஅடாக மலர என்னுடைய வாழ்த்துக்கள்.
முடிவுரை
நான் மேலே குறிப்பிட்ட அனைத்து யோசனைகளும் இந்திய சீன மக்களிடையே விளக்கி எடுத்துரைப்பேன். இதற்கு உரிய தலைமை அமைச்சர்களையும் அரசு தலைவர்களையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து என்னுடைய கருத்தை முன் வைப்பேன். இதன் படி இரு நாடுகளும் செயல்பட்டால் 2025ம் ஆண்டில் உலகில் மாபெரும் வல்லரசாக இந்தியாவும் சீனாவும் உலகை வலம் வலும் எனஅபதில் சிறிதும் ஐயப்பாட்டிற்கு இடமில்லை. 1 2
|