• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-30 08:57:55    
ரோபு இன கிராமமான-Kaerquga

cri

சீன உய்கூர் இனத்தின் ஒரு கிளையான "ரோபு" இனத்தவர்கள், வட மேற்கு சீனாவின் தாக்ராமாகன் பாலைவனத்தின் ரோபுமி பிரதேசத்தில் வாழ்கின்றனர். இவ்விடத்தில் தாரிமு ஆறு மெதுவாக ஓடுகின்றது. பாலைவனத்தில் ஏரிகளும் பசுமை அடர்ந்த வட்டாரங்களும் உருவாயின. ஆற்றங்கரையில் வாழும் ரோபு இனத்தவர்கள் மீன்பிடித்தல் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர். பாலைவனத்திலுள்ள மீனவர்களாகியுள்ளனர். ரோபு இனத்தவர்கள் குழுமிவாழும் Kaerquga கிராமத்துக்கு இன்று தங்களை அழைத்துச் செல்வோம். Kaerquga, சின்கியாங்கின் மத்திய பகுதியின் Wei Li மாவட்டத்திலுள்ள ஒரு ரோபு இனக் கிராமமாகும். 100 குடும்பங்களுக்குக் குறைவான இக்கிராமத்தில், 104 வயதான முதியோர் Sidike Ailiniyazi கூறியதாவது

"எங்கள் ரோபு இனத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக மீன்பிடித்து வாழ்ந்துள்ளோம். குழந்தைக்காலத்தில், மீனவரான எனது தந்தையிடமிருந்து மீன்பிடிப்பதைக் கற்றுக் கொண்டு மீன்பிடித்தேன்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளில், ரோபுமி பிரதேசத்தில் பாலைவனமயமாக்கம் நாளுக்கு நாள் கடுமையாகியுள்ளது. தாரிமு ஆறு படிப்படியாகக் குறுகி வருகின்றது. ரோபு இன மக்கள் வாழ்வதற்கு இன்றியமையாத ஏரிப்பரப்பு மென்மேலும் குறைந்து வருகின்றது. ரோபு இனத்தவர்கள் பலர், மீன்பிடிப்பைக் கைவிட்டு, பயிர்சாகுபடி செய்யக் கற்றுக்கொள்ளத் துவங்கினர். கிராமவாசி அமுதுங் சாகுபடி செய்த போதிலும், மீன்பிடிக்கும் பாரம்பரிய வாழ்க்கையை நிறைநிறுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: 

"இப்போது ஆற்று நீரின் ஆழம், எங்கள் குழந்தைக்காலத்தில் இருந்ததை விட 50 விழுக்காட்டுக்குக் குறைவானது. மீன்களும் மிகச் சிறியவை. தற்போதைய தாரிமு ஆற்றின் ஏரிகள் வறட்சியடைந்துள்ளன, நீரில்லை. எனவே, மீன்களும் இல்லை" என்றார், அவர்.

மீன்பிடிப்பை அல்லது பயிர்சாகுபடி செய்வதை மட்டும் சார்ந்திருந்தால், தமது வாழ்க்கை வளமடையச் சாத்தியமில்லை. ஆதலால், 2000ம் ஆண்டில் இந்த சின்னஞ்சிறு கிராமத்தில்லேயே, கிராமவாசிகள், ரோபு இன கிராமச் சுற்றுலாகாட்சி மண்டலத்தைத் திறந்து வைத்தனர். கிராமத்தின் சிறு பாதையோரத்தில், ரோபு இனத்தவர்களின் பாரம்பரிய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புதிதாக மறுசீரமைக்கப்பட்ட பாரம்பரிய குடியிருப்புகளும் மக்களின் பார்வையில் தென்படுகின்றன. அங்குள்ள தோற்றத்தை மாற்றுவதற்காக, ரோபு இனக்கிராமச் சுற்றுலாவுக்கான உரிமம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று Kaerquga கிராமம் விரும்புகின்றது.
சுற்றுலா வளர்ச்சியினால் ஏற்பட்ட நலனைத் தாம் உணர்ந்து கொண்டுள்ளதாக அமுதுங் சொன்னார். அவர் கூறியதாவது:

"இப்போது, மீன்களை பிடித்த பின் அவற்றை விற்கலாம். என்னைப் பொறுத்த வரை, இது மிக நல்லது. காரணம், போக்குவரத்து வசதியாக உள்ளது. முன்பு, இவ்விடத்தில் மீன்பிடித்து விற்க, இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து செல்வதற்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. தற்போது ஒரு மணிநேரம் மட்டும் போதுமானது" என்றார்.

1 2