• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-30 08:57:55    
ரோபு இன கிராமமான-Kaerquga

cri

சுற்றுலாத்துறையின் வளர்ச்சியினால், ரோபு இனத்தவர்களிடையே பரவியுள்ள சில நாட்டுப்புறக் கலைகளும் படிப்படியாக வெளிப்பட்டுள்ளன. சிங்க நடனம் ரோபு இன மக்களின் பாரம்பரிய நடனமாகும். ரோபு இனத்தவர்கள் குழுமிவாழும் Kaerquga கிராமத்தில் இந்நடனம், ஆயிரம் ஆண்டுகளாகப் பரவியுள்ளது. 88 வயதான முதியோர் Yasen Saipi, தற்போது, இக்கிராமத்தில் முழுமையாக இந்நடனத்தை ஆடக் கூடியவராவார்.

எமது செய்தியாளர் அவரைச் சந்தித்த போது, ஆடல்பாடல் குழுவின் பயிற்சி அறையில் நடனமாடிக் கொண்டிருந்தார். பாரம்பரிய நடன உடுப்பு, அளவுக்குமீறிய முக பாவனைகள், மனமுருகும் அங்க அசைவுகள் போன்றவற்றின் மூலம், ஒரு உயிருள்ள சிங்கம் நடனமாடுவது போலவே முதியோர் நடனமாடினார்.

சிங்க நடனம் பற்றி அவர் கூறியதாவது

"கர்ண பரம்பரை கதையில், முன்பு இரண்டு பேரரசர்கள் ஒரே நேரத்தில் தாக்ராமாகன் பாலைவனத்தில் ஒரு சிங்கத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவர் சிங்க நடனத்தை இயற்றினார். இது, ரோபு இனத்தவர்களின் சிங்க நடனத்தின் தோற்றுவாயாகும். ஹன் இன மக்கள் புத்தாண்டின் போது ஆடும் சிங்க நடனம், வேறுபட்ட நடனமாகும். அது அப்போதைய மற்றொரு பேரரசரால் கண்டுபிடிக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

முதிய வயது காரணமாக, சிங்க நடனம் பரவாமல் இருக்கும் என்று அவர் கவலைப்பட்டார். அவரது பேரன் Aerfan Jiang 4 வயதிலிருந்தே பாட்டனாரைப் பின்பற்றி சிங்க நடனமாடுவதைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். இது வரை ஐந்தாண்டுகள் கழிந்து விட்டன. பேரன் விரைவாகக் கற்றுத் தேர்ந்ததற்கு தாம் மனநிறைவு அடைவதாகக் கூறினார். இப்போது பயணிகள் சிங்க நடனத்தின் மீது மென்மேலும் அக்கறை கொண்டுள்ளனர். கிராமவாசிகள் பலர், தம்மைப் பின்பற்றி சிங்க நடனமாடத் துவங்கியதாக Yasen Saipi தெரிவித்தார்.

சுற்றுலா வளர்ச்சி மூலம், தமது இனத்தின் பாரம்பரிய பண்பாட்டின் முக்கியத்துவத்தை ரோபு இனத்தவர்கள் மீண்டும் புரிந்து கொண்டுள்ளனர். இது மட்டுமின்றி, சுற்றுலாத்துறை, ரோபு இன மக்களின் வாழ்க்கை நிலையையும் மேம்படுத்தியுள்ளது. இக்கிராமத்திலுள்ள நூறு வயதுடைய முதியோர் Sidike Ailini பேசுகையில், வாழ்க்கை நிலை சீராகியுள்ளது. தம் ஊரிலிருந்து வெளியேறி, வெளிப்புற உலகைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.

இவ்வளவு ஆண்டுகளில் நான் பாலைவனப் பிரதேசத்தில் வாழ்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக வேறு எந்த இடத்துக்கும் போகவில்லை. கடந்த ஆண்டு, உருமுச்சி, பெய்சிங் ஆகியவற்றுக்குச் சென்றேன். பெய்சிங்கில் 12 நாட்கள் தங்கி, முழு பெய்சிங நகரத்திலும் சுற்றுலா சென்றேன். பெருஞ்சுவர், அரண்மனை அருங்காட்சியகம், மக்கள் மா மண்டபம் உட்பட பார்வையிட வேண்டிய இடங்களைப் பார்த்தேன். இனிமேல், நகரங்கள் பலவற்றுக்குப் போக விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.


1 2