1994ஆம் ஆண்டில் சீனாவின் தோல் தயாரிப்புத் தொழில் சங்கம், சீன மொழியில் உண்மையான தோல் என்று எழுதப்பட்ட அடையாளத்தை வணிகச் சின்னமாகக் கொண்டு சீனத் தொழில்-வணிக நிர்வாக மேலாண்மைப் பணியகத்தில் பதிவு செய்தது. கடந்த 13 ஆண்டுகளில் சீனத் தோல் தயாரிப்புத் தொழிலின் வளர்ச்சியுடன், இந்த வணிகச் சின்னம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, நுகர்வோர்களால் அறிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதிவரை, உண்மையான தோல் என்ற அடையாளத்தைக் கொண்ட சீனத் தோல் பொருட்களின் வகை 450ஐ எட்டியுள்ளது. காலணி, தோல் சட்டை, விளங்குகளின் உரோமத்தோடு கூடிய தோல் ஆடை, பெட்டி, பை உள்ளிட்ட பல்வேறு தோல் பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. சீனாவில் அனைவருக்கும் தெரிந்த இந்த வணிகச் சின்னம் கொண்ட தோல் பொருட்கள் பல காணப்படுகின்றன.
சீனாவில் தரமிக்க தோல் பொட்கள் மட்டும் உண்மையான தோல் என்ற அடையாளத்தைப் பெற முடியும் என்று சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கத்தின் பொறுப்பாளர் chen zhan guang கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் தோல் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் சில வெளிநாட்டுச் சந்தையில் நுழையத் தொடங்கி, சில அனுபவங்களைத் திரட்டி, ஓரளவு செல்வாக்கைப் பெற்றுள்ளன. எனினும், சீனாவின் தோல் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நுழைய வேண்டுமானால், தனியொரு வணிகச் சின்னத்தின் ஆற்றலைக் கொண்டு சந்தையைத் திறந்துவைப்பது, கடினம். இதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும். இதனால், சீனத் தோல் தயாரிப்புத் தொழிலின் சர்வதேச மயமாக்கத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, இத்தொழில் நிறுவனங்களுக்கு உதவியளிக்க ஒருவகை வழிமுறை உடனடி தேவைப்படுகின்றது. இந்த நிலைமையில், ஆங்கில மொழியில் Genuine Leather Product அதாவது உண்மையான தோல் பொருள் என்று எழுதப்பட்ட அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளத்தைப் பயன்படுத்தும் நோக்கம் பற்றி சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கத்தின் தலைவர் su chao ying அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,
சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கம், ஆங்கில மொழியில் உண்மையான தோல் என்று எழுதப்பட்ட அடையாளத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், தோல் தயாரிப்புத் தொழில் சங்கத்தின் மீதான பொது நம்பிக்கை மூலம், வெளிநாட்டவர்களுக்கும் நுகர்வோருக்கும் உண்மையான தோல் என்ற அடையாளத்தையுடைய தோல் பொருட்களை அறிமுகப்படுத்தி, உண்மையான தோல் என்ற அடையாள வணிகச்சின்னத்தைப் பயன்படுத்தி, சீனத் தோல் தயாரிப்புத் தொழில் வணிகச் சின்னத்தின் சர்வதேச மயமாக்கத்தை வேகப்படுத்துவதாகும் என்றார் அவர்.
ஆப்பிரிக்கச் சந்தையில் நுழைவதற்கு முக்கியத்துவம் அளிப்பதில் சீனத் தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கம் வழிகாட்டும் என்று இச்சங்கத்தின் தலைமைச் செயலாளர் su chao ying கூறினார்.
ஒன்று, ஆப்பிரிக்கச் சந்தை பற்றி சீனாவின் சில தொழில் நிறுவனங்களுக்குக் குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு அவ்வளவு தெரியாது.
1 2
|