இதனால், நாடு அளவிலான அமைப்பாக விளங்கும் சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கத்துக்கு, மிகப் பெரிய ஆப்பிரிக்கச் சந்தையில் நுழைந்து வளர்ச்சியடைவதில் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் கடப்பாடும் உள்ளன. எங்கள் சங்கமும் ஆப்பிரிக்கச் சந்தையும் ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யலாம். ஆகவே, இச்சந்தையில் நுழைவதற்கு, எங்கள் சங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இரண்டு, ஆங்கில மொழியில் உண்மையான தோல் என்று எழுதப்பட்ட வணிகச் சின்னத்தைக் கொண்டு, சீனத் தொழில் நிறுவனங்கள் ஆப்பிரிக்கச் சந்தையில் நுழைந்து, ஆப்பிரிக்க வணிகர்களுடன் பேரம்பேசுவது மேலும் எளிதாக இருக்கும் என கருதுகின்றோம் என்றார் அவர்.
உலகில் முதலாவது தோல் தயாரிப்பு நாடாக சீனா மாறியுள்ளது என்றும் அதன் தோல் காலணி உற்பத்தி அளவு, உலகில் 55 விழுக்காட்டை வகிக்கின்றது என்றும் தெரிய வருகின்றது. ஆனால், முன்பு சீனாவின் தோல் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் பொதுவாகத் தோல் காலணிப் பதனீட்டு என்ற வடிவத்தில் மற்ற நாடுகளின் வணிகச் சின்னத்துடன் வெளிநாட்டுச் சந்தையில் நுழைந்தன. சீன வணிகச் சின்னமுடைய தோல் பொருட்கள் விலை மலிவான பொருட்கள் என்று கருதப்பட்டது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட உண்மையான தோல் என்ற அடையாளத்தின் பயன்பாடு, சர்வதேசச் சந்தையில் சீனத் தோல் பொருட்களின் செல்வாக்கை மேம்படுத்துவதற்குத் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.
சீனத் தோல் தயாரிப்புத் தொழிலின் எதிர்கால வளர்ச்சியின் மீது, சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கத்தின் நிரந்தரத் துணைத் தலைவர் சாங் சு ஹுவா அம்மையார் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது,
தோல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் நாங்கள், இத்தொழிலின் எதிர்காலம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். இத்தொழில் காலைச் சூரியனா மாலைச் சூரியனா என்று சிலர் கேட்டனர். இத்தொழில் நீண்ட காலம் வளர வல்ல தொழில் என்று பதிலளிக்கின்றோம். உண்மையான தோல் தயாரிப்புத் தொழிலின் வளர்ச்சிக்கும் அதன் விற்பனைச் சந்தைக்கும் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. அடுத்த நூறு, இரு நூறு ஆண்டுகளில் இத்தொழில் தொடர்ந்து விறுவிறுப்பாக வளரும் என கருதுகின்றோம் என்றார் அவர்.
தற்போது, ஆங்கில மொழியில் உண்மையான தோல் என்று எழுதப்பட்ட அடையாளத்தைக் கொண்ட வணிகச் சின்னம், சீனா தவிர்த்த 14 நாடுகளிலும் பிரதேசங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனத் தோல் தயாரிப்புத் தொழில் சங்கம்,மேலும் அதிகமான நாடுகளில் இந்த வணிகச் சின்னத்தைப் பதிவு செய்வதன் மூலம், சீனத் தோல் தயாரிப்புத் தொழில் வணிகச் சின்னத்தின் சர்வதேச மயமாக்கத்தை விரைவுபடுத்தும். அதே வேளையில், தொழில் நிறுவனங்கள் தத்தமது தோல் பொருட்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, ஏற்றுமதிப் பொருட்களின் தரத்தையும் கூடுதல் மதிப்பையும் இச்சங்கம் உயர்த்தும். 1 2
|