தெற்குச் சீனாவிலுள்ள குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சிறுபான்மை தேசிய இனங்கள் குழுமி வாழும் பிரதேசமாகும். அங்கு, சுவாங் இனம், மியெள இனம், யங் இனம் முதலிய சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த ஒரு கோடியே 80 லட்சம் உடன்பிறப்புகள் வாழ்கின்றனர். மத்திய குவாங் சியிலுள்ள லியு சோ பிரதேத்தில், ஒரு உயர் இடைநிலைப்பள்ளி உள்ளது. "சீனத் தேசிய இன இடைநிலைப்பள்ளிக்கு முன்மாதிரி பள்ளி" "சீனத் தேசிய இனக் கல்விக்கு முன்னேறிய கூட்டண்மை" போன்ற பல புகழ்ச்சிகள் அதற்கு வழங்கப்பட்டன. 1991ம் ஆண்டு முதல் சீனாவின் பிரபலமான சிங் வாங் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, குவாங் சியிலுள்ள பல்வேறு இடைநிலைப்பள்ளிகளில் முதலிடம் வகிக்கின்றது. கிராம மாணவர்கள், குறிப்பாக, சிறுபான்மை தேசிய இனங்களின் வறிய மாணவர்கள் அதிகமான பள்ளி, இவ்வளவு வெற்றி பெற்றுள்ளது ஏன்? என்ற கேள்வியுடன் எனது செய்தியாளர் அங்கு சென்றார்.

இவ்வுயர் இடைநிலைப்பள்ளி 1980ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போதைய 52 வகுப்புகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டு மாணவர்கள், சுவாங் இனம், மியெள இனம், யங் இனம், துங் இனம், மு லெள இனம் முதலிய சிறுபான்மை தேசிய இன மாணவர்களாவர். அவர்கள் பெரும்பாலானோர், ஒதுக்குப்புறப்பிரதேசங்களிலிருந்து வந்தனர் என்று குறிப்பிட்ட, இப்பள்ளியின் வேந்தர் ஹங் தே சுங் கூறியதாவது:
"சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களின் திறமைசாலிகளைப் பயிற்றுவித்து, சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களிலுள்ள வறிய மாணவர்கள் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதம் செய்து, சிறுபான்மை தேசிய இன பிரதேசங்களுக்கென மாணவர்களைச் சேர்ப்பதற்கான சிறப்புக் கொள்கையை வகுப்பது, எங்கள் பள்ளி நிறுவப்பட்ட துவக்கக்காலத்திலேயே நிர்ணயிக்கப்பட்டது" என்றார்.

லியு சோ பிரதேசத்தில் தேசிய இவ்வுயர் இடைநிலைப்பள்ளியின் உருவாக்கம், பல ஒதுக்குப்புற மலைப்பிரதேசங்களில் தலைமுறை தலைமுறையாக எவரும் பல்கலைக்கழகத்தில் சேராத வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது. சில குடும்பங்களில் பல பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளியின் சுவாங் இன ஆசிரியை வே டன் கு, அவர்தம் சிறிய மலைக் கிராமத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழக மாணவியாவார். "மலையிலிருந்து வெளியே பறக்கும் ஒரு Phoenix பறவை" என, அவர் பாராட்டப்படுகின்றார். செய்தியாளரிடம் பேசுகையில், சிறிய மலைக் கிராமத்திலிருந்து வந்துள்ளால், சிறுபான்மை தேசிய இன மாணவர்கள் மீது ஆழ்ந்த அன்புணர்வு கொண்டுள்ளதாகக் கூறினார். ஊரின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் வகையில், தன்னை போன்ற மேலதிகமான மலைப்பிரதேச பல்கலைக்கழக மாணவர்களைப் பயிற்றுவிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
1 2
|