16 வயதான யங் இனச் சிறுமி பங் ஸியோ யு, இரண்டாவது வகுப்பு மாணவியாவார். செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
"எனது ஊர், வறிய ஒரு சிறிய மலைப் பிரதேசத்தில் உள்ளது. இளைய இடைநிலைப்பள்ளி பட்டதாரிகளில் உயர் இடைநிலைப்பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் விகிதம், குறைவு. அவ்வாண்டு நான் மட்டும் இவ்வுயர் இடைநிலைப்பள்ளியில் சேர்ந்தேன். எனவே, இவ்வாய்ப்பினை நான் மிகவும் பேணிமதிக்கின்றேன். வறிய மலைப்பிரதேசத்திலிருந்து வந்த நான், படிப்பில் பின்தங்கிய நிலையில் இருப்பதால், இங்குள்ள ஆசிரியர்கள் என் மீது அக்கறை காட்டி உதவி செய்துள்ளனர். இதனால், நான் வெகுவிரைவில் முன்னேற்றம் அடைந்தேன்" என்றார், அவர்.

சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களின் உற்பத்தி ஆற்றலின் பின்தங்கியத் தன்மை மற்றும் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ளாதத் தன்மை காரணமாக, மாணவர்கள், தாழ்வு மனப்பான்மை தனிமை, பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனின்மை முதலிய குணாம்சம் உருவாவது வழக்கம். லியு சோ பிரதேச தேசிய இன சீனியர் இடைநிலைப்பள்ளியில், தாழ்வு மனப்பான்மை கொண்ட பங் ஸியோ யு போன்ற மாணவர்கள் பலர் இருக்கின்றனர்.
வெகு விரைவில் நகரத்தின் நவீன வாழ்க்கைக்கு ஏற்புடையதாக வாழ்ந்து, தம் பக்கத்திலுள்ளவர்களுடன் கருத்து பரிமாறி ஒத்துழைப்பதைக் கற்றுக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்த வேண்டும் என்று இப்பள்ளியின் ஆசிரியர் லுங் மிங் சு கூறினார்.

லியு சோ பிரதேசத்தின் உயர் இடைநிலைப்பள்ளியின் பெரும்பாலான மாணவர்கள் மலைப்பிரதேசங்களின் கிராமங்களிலிருந்து சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பப் பொருளாதார வசதிகள் சிறப்பாக இல்லை. பல்வேறு வழிகள் மூலம் அவர்களின் வாழ்க்கையிலுள்ள இன்னல்களைத் தீர்த்து, ஒவ்வொரு வறிய மாணவரும் பட்டதாரியாவதற்கு இப்பள்ளி நம்பகமான பின்னணிச் சேவை உத்தரவாதம் அளித்துள்ளது.
லேள் ஜ ஜ என்னும் மாணவரின் ஊரான செங் ஸியுன் மாவட்டம், நாடளவில் ஒரு வறிய மாவட்டமாகும். இப்பள்ளியிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர் கூறியதாவது:
"எங்கள் தேசிய இன மாணவர்களைப் பொறுத்த வரை, பள்ளியில் எங்களுக்கு போர்வை படுக்கை விரிப்பு முதலிய அன்றாட வாழ்க்கைப் பொருட்களை விநியோகித்தது. அன்றி திங்கள்தோறும் உதவித்தொகையும் வழங்குகின்றது" என்றார்.
வகுப்பில் தனது மதிபெண் தலைசிறந்தது. பெய்சிங்கிலுள்ள சிங்வாங் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில பாடுபடுவது, தனது குறிக்கோளாகும். இதன் மீது நிறைய நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1 2
|