வட வளை குடாவின் பின் பகுதி சீனாவின் தென் மேற்கு பிரதேசத்துடனும் முன் பகுதி கிழக்காசிய நாடுகளுடனும் இணைந்துள்ளன. சீனாவின் தென் மேற்கு பிரதேசம் ஆசியான் நாடுகளுடன் இணையும் முக்கிய கடல் போக்குவரத்து மையமாக அது திகழ்கின்றது. சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கத்தில் அதன் மேம்பாடான இட அமைவினால் படிப்படியாகச் சீன-ஆசியான் வர்த்தகத்தில் மையப் பகுதியாக அது மாறிவருகின்றது. தென் சீனக் கடலின் வடப் பகுதியில் அமைந்துள்ள வட வளை குடா, சீனா வியட்நாம் ஆகிய இரு நாடுகளின் தரை நிலமும் சீனாவின் ஹைநான் தீவும் சூழ்ந்துள்ள முழுமையாக மூடப்படாத வளை குடா ஆகும். 2010ஆம் ஆண்டிற்குள் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது பற்றிய உடன்படிக்கையில் 2002ஆம் ஆண்டு சீனாவும் ஆசியானைச் சேர்ந்த 10 உறுப்பு நாடுகளும் கையொப்பமிட்டன. இக்குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக, சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம், குவாங்துங், ஹைநான் ஆகிய இரு மாநிலங்கள், வியட்நாமின் சில மாநிலங்கள் ஆகியவற்றைக் கொண்ட அனைத்து வட வளை குடாப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க இந்த வளை குடாவின் வட பகுதியில் அமைந்துள்ள சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் திட்டமிட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் குழுச் செயலாளர் லியூ சிபௌ, அனைத்து வட வளை குடா பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதென்ற கருத்தை முன்வைத்தார். மண்டலத்தின் அளவை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புருனை ஆகியவற்றுக்கு நீட்டிப்பது என்பது இக்கருத்தின் நோக்கம் ஆகும். இக்கருத்துக்கிணங்க, குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிர்வாகத்திலுள்ள வட வளை குடாவின் கரையோரப் பிரதேசங்களிலும் இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான நானிங் நகரிலும் வட வளை குடா (குவாங்சி)பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதென இத்தன்னாட்சிப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி லியூ சிபௌ எமது செய்தியாளரிடம் கூறியதாவது,
வட வளை குடா(குவாங்சி)பொருளாதார மண்டலத்தின் பன்முக வெளிநாட்டுத் திறப்புப் பணியை வேகப்படுத்த வேண்டுமானால், இப்போது தொடங்கி, நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு, இப்பணியைச் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டல உருவாக்கத்துக்கான ஒத்துழைப்புடன் இணைத்துத் திட்டமிட்டு ஏற்பாடு செய்து மேம்படுத்த வேண்டும் என்றார்.
வட வளை குடாவின் இட அமைப்புத் தனிச்சிறப்புக்கேற்ப, இப்பொருளாதார மண்டலம், சீன-ஆசியான் வர்த்தகத்தின் முக்கிய பகுதியாக மாற்றுவது என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். fang cheng துறைமுக நகரம், மேற்கூ றிய பொருளாதாரா மண்டலத்தில் மிகப் பெரிய துறைமுக நகராகும். பத்தாயிரம் டன்னுக்கும் மேற்பட்ட எடையுள்ள 21 தங்கு துறைகள் இத்துறைமுகத்தில் உள்ளன. ஆண்டுக்குத் தங்க வல்ல ஆற்றல் 3 கோடி டன்னைத் தாண்டியுள்ளது. சீன-ஆசியான் வர்த்தகத்தில் முக்கிய துறைமுகமாக அது திகழ்கின்றது. fang cheng துறைமுகக் குழுமத்தின் துணை மேலாளர் சியெயி எமது செய்தியாளரிடம் கூறியதாவது,
அனைத்து வட வளை குடா மண்டலப் பொருளாதார ஒத்துழைப்பு என்ற பின்னணியில், நமது fang cheng துறைமுகம் மேலும் உயர்ந்த குறிக்கோளை எட்ட வேண்டி ஏற்பட்டது. அதாவது, இத்துறைமுகத்தை வட வளை குடா மண்டலத்திலான சர்வதேச கப்பல் போக்குவரத்து மையமாகக் கட்டியமைக்க வேண்டும் என்றார் அவர்.
1 2
|