• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-09 11:10:02    
சீன-ஆசியான் வர்த்தகத்தில் முக்கிய பகுதியான வட வளை குடா

cri

துறைமுகத்தின் ஒட்டுமொத்தப் போட்டி ஆற்றலை உயர்த்தும் பொருட்டு, தற்போது குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம், இம்மண்டலத்திலுள்ள fang cheng துறைமுகம், Qin zhou, பெய்ஹை ஆகிய 3 முக்கிய துறைமுகங்களின் கட்டுமானப் பணியை வேகப்படுத்திவருகின்றது. 2010ஆம் ஆண்டிற்குள் வட வளை குடா பொருளாதார மண்டலத்தில் 10 கோடி டன் எடையுள்ள கப்பல்கள் தங்க வல்ல நவீன கூட்டுத் துறைமுகம் உருவாக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

கடல் போக்குவரத்து நெறிகள் தவிர, வட வளை குடா (குவாங்சி) பொருளாதார மண்டலத்திலுள்ள தரைப் பாதையும் சீன-ஆசியான் சரக்குகளின் வர்த்தக அதிகரிப்பினால் மென்மேலும் விறுவிறுப்பாக உள்ளது.

வட வளை குடாவின் கரையோரத்தில் அமைந்துள்ள துறைமுகங்களும் தரை நுழைவாயிலும் மேலும் பெரும் பங்கு ஆற்றுவதற்குத் துணை புரிய, தற்போது குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் போக்குவரத்து அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்திவருகின்றது. போக்குவரத்துக்குத் திறந்துவைக்கப்பட்டுள்ள இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான நான்னிங்கிலிருந்து 3 கரையோரத் துறைமுகங்களுக்குச் செல்லும் உயர் வேக நெடுஞ்சாலைகளின் அடிப்படையில் கடற்கரைக்குச் செல்லும் வேறு 3 உயர் வேக நெடுஞ்சாலைகளையும் கட்டியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, உள்ளூர் இருப்புப் பாதையைப் புதிதாகக் கட்டியமைப்பது அல்லது சீரமைப்பதன் மூலம், அவற்றைத் தென் கிழக்காசிய நாடுகளின் இருப்புப் பாதைகளுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியிலுள்ள தரைப்பாதை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படுவதன் மூலமும் கடலோரத் துறைமுக வசதிகளின் மேம்படுத்தப்படுவதன் மூலமும் குவாங்சிக்கும் ஆசியான் நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலும் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வணிகப் பணியகத்தின் தலைவர் லீ வென் ஜெ கூறினார்.

இரு தரப்பு முதலீடு மற்றும் வர்த்தகத்தின் வசதி மயமாக்கத்துக்காக, முதலீட்டுச் சூழ்நிலையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளைக் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் மேற்கொண்டுவருகின்றது என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, வர்த்தக மற்றும் முதலீட்டு வசதி மயமாக்கத்தில் நாம் பயன் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். அவை, முதலீட்டுச் சூழ்நிலையைச் சீராக்குவது, துறைமுகங்களின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது, அவற்றின் மீதான நிர்வாகத்தை மேம்படுத்துவது, தொற்று நோய் பரிசோதனையில் ஆசியான் நாடுகளுடனான ஒத்துழைப்பையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்துவது, வணிகப் பணியாளர்களின் வசதியான நடமாட்டத்துக்குத் துணை புரிவது என்பனவாகும் என்றார் அவர்.

குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம், அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, பல்வகை சிக்கலான பரிசீலனை மற்றும் பரிசோதனை ஒழுங்கு முறைகளை எளிதாக்கி, வர்த்தகக் கொள்கையின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டும். முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பரந்த அளவில் பயன்படுத்தி, குவாங்சி வர்த்தக முதலீட்டுச் சூழ்நிலையை மேம்படுத்தப் பாடுபட வேண்டும் என்று லீ வென் ஜெ கூறினார்.


1 2