
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் தொழில் மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் விரைவான வளர்ச்சியுடன், கிராமங்களின் பெருவாரியான உபரி உழைப்பாளர்கள் நகரங்களில் வேலை செய்ய தெரிவு செய்தனர். தற்போது நாடு முழுவதிலும் உள்ள 80 கோடிக்கு அதிகமான விவசாயிகளில், சுமார் 20 கோடி பேர் வேலை செய்ய நகரங்களுக்குச் சென்றனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமையில், சீன அரசும் சமூகமும் பெரும் கவனம் செலுத்தும் அதே வேளையில், அவர்களின் உரிமை மற்றும் நலனை உத்தரவாதம் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

கிழக்கு சீனாவின் கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ச்சே ஜியாங் மாநிலத்திலுள்ள உயர் வேக இருப்புப் பாதையின் கட்டுமான இடம் ஒன்றில், அங்கே வேலை செய்யும் விவசாயி சென் சி, மகிழ்ச்சிடன் செய்தியாளரிடம் தமது ஊதிய அட்டையைக் காண்பித்தார். இந்த அட்டை மூலம், அவருக்கு உரிய நேரத்தில் முழுத் தொகை ஊதியம் கிடைப்பது மட்டுமல்ல, அவரின் குடும்பத்தினரும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் அவரின் ஊதியத்தைப் பயன்படுத்த முடியும். சென் சி கூறியதாவது
"இந்த அட்டை என் பையில் வைக்கப்படுகிறது. வங்கி வைப்புப் புத்தகம் என் வீட்டில் வைக்கப்படுகிறது. இதனால் என் குடும்பத்தினருக்கு நேரடியாக பணம் கிடைக்கலாம்" என்றார் அவர்.
முன்பு, இன்றியமையாத கண்காணிப்பு மற்றும் நிர்வாக அமைப்பு முறை இல்லாததால், கட்டிடத் தொழிலின் பொறுப்பாளர்கள் சிலர், பணம் பெற்ற பின், வேலை செய்த விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் ஊதியத்தை வழங்குவது கிடையாது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசின் தலையீட்டினால், பல இடங்களில் நிலவிய இந்தப் பிரச்சினை ஓரளவுக்கு சீராக தீர்க்கப்பட்டுள்ளது. வங்கி அட்டையில் ஊதியம் நேரடியாக சேமிக்கப்படுவதன் மூலம், விவசாயத் தொழிலாளர்கள் உழைப்பு மூலம் கிடைத்த வருமானத்தை உரிய நேரத்தில் பெறுவதற்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
1 2
|