• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-11 16:44:29    
நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனை உத்தரவாதம் செய்ய சீனாவின் முயற்சிகள்

cri

சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள லியௌ நிங் மாநிலத்தின் சென் யாங் நகரில், நீதி மன்றம், உழைப்பு மற்றும் சமூக உறுதியளிப்புப் பணியகம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் இடம்பெறும் விவசாயிகளின் உரிமை காப்பு மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கென சிறப்பாக நிறுவப்பட்ட முதலாவது மையம் இதுவாகும். விவசாயத் தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலனுடன் தொடர்புடைய வழக்குகள் அங்கே அமைந்துள்ள விரைவுத் தீர்ப்பளிப்பு நீதி மன்றத்தில் விரைவாக பதிவு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படும். வழக்கு தொடுக்கும் ஒழுங்கு முறையை எளிதாக்கி விவசாயத் தொழிலாளருக்கு வசதி வழங்கி, நீண்டகாலம் கொடுக்கப்படாத ஊதியம் அவர்களுக்கு கூடிய விரைவில் கிடைக்க உதவி செய்வது என்பது, இந்த விரைவுத் தீர்ப்பளிப்பு நீதி மன்றத்தை நிறுவுவதன் நோக்கமாகும் என்று நீதிபதி வெய் சியௌ துங் செய்தியாளரிடம் கூறினார்.

"இந்த விவசாயத் தொழிலாளர் உரிமையைப் பேணிக்காக்கும் மையத்தை விட்டு வெளியேறும் முன், விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியத்தைப் பெறத் தர, நாங்கள் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

சீன அரசின் விதிகளுக்கிணங்க, நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு சட்ட உதவி முக்கியமாக அளிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, 2006ஆம் ஆண்டில், சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள சட்ட உதவி நிறுவனங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்களுக்கு, சட்ட உதவி வழங்கியுள்ளன. 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 65 விழுக்காடு அதிகரித்தது.

தவிர, விவசாயத் தொழில்களின் ஊதியத்துக்கான காப்புறுதித் தொகை முறைமையும், சீனாவின் பல்வேறு இடங்களில் படிப்படியாக நிறுவப்பட்டு வருகிறது. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிலுள்ள கட்டிடத் தொழில் நிறுவனங்களும், உரிய நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்காத நிலை ஏற்பட்ட தொழில் நிறுவனங்களும், உரிய நேரத்தில் அவர்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, உழைப்புக் காப்புறுதி நிறுவனங்களுக்கு ஓரளவு தொகையைச் செலுத்த வேண்டும். ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படாத நிலை ஏற்பட்டால், இந்தக் காப்புறுதிப் பணம் ஊதியமாக விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.


1 2