• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-11 16:47:47    
Shi Jia Zhuang நகரின் குடியிருப்புப் பகுதி இணக்கப் பணி

cri

Shi Jia Zhuang நகர்

ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியும் ஒரு பெரும் குடும்பம் போல். இந்த பெரும் குடும்பத்தில், சர்ச்சைகள் நிகழ்வது தவிர்க்கப்பட முடியாதது. கடந்த 2 ஆண்டுகளாக, அயலவர்களுக்கிடை முரண்பாட்டை மேலும் செவ்வனே தீர்க்க, சீனாவின் He Bei மாநிலத்தின் Shi Jia Zhuang நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இணக்கம் செய்யும் பயன்மிக்க புதிய வழிமுறை துவங்கியுள்ளது. அடிமட்ட மக்களுக்குச் சேவை புரியும் குடியிருப்புப் பகுதி இணக்க அலுவலகங்கள் நிறுவப்பட்டன. குடியிருப்புப் பகுதி நிலைமையை அறிந்து கொள்ளும் ஒருங்கிணைப்பாளர், குடியிருப்பு பகுதியில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை காலதாமதமின்றி இணக்கம் செய்கின்றனர். இவ்வகையினால், நீதி மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல சர்ச்சைகள் குடியிருப்பு பகுதியிலேயே தீர்க்கப்பட்டுள்ளன.

அண்மையில், வீட்டுக் குப்பைகளின் துப்புரவு பிரச்சினையினால், Shi Jia Zhuang நகரின் Chang An பிரதேசத்தின் Jian Ming குடியிருப்புப் பகுதியில் வாழும் Jiang Xiu Luanக்கும், அவரின் அயலவருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இரு தரப்பினரும் நீதி மன்றத்தில் இப்பிரச்சினையைத் தீர்க்க தீர்மானித்தனர். இரு தரப்பினர்களுக்கிடையே பதட்ட உறவு ஏற்பட்டது. Jian Ming குடியிருப்பு பகுதி இணக்க அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் இதை அறிந்த பின், இரு குடும்பங்களின் வீட்டுக்குச் சென்று, சர்ச்சை ஏற்பட்டுள்ள காரணங்கள் பற்றி விபரமாக கள ஆய்வு செய்து, இணக்கம் செய்து வைத்தார். அவரின் முயற்சிகளின் விளைவாக, இவ்விஷயம் மோசமாகாமல் காலதாமதமின்றி தடுக்கப்பட்டு, முரண்பாடு தீர்க்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் சமரசம் செய்தனர். Jiang Xiu Luanவின் தந்தை, குடியிருப்புப் பகுதி இணக்க அலுவலகத்தின் ஒருங்கிணைப்புப் பணிக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பிரச்சார உள்ளடக்கம்

"அவர்கள் இல்லாவிட்டால், இவ்விஷயத்தை செவ்வனே தீர்த்திருக்க முடியாது. இணக்கம் செய்து கொண்ட பின், இரு தரப்பினரும் கை குலுக்கிக் கொண்டனர். முரண்பாடு நீக்கப்பட்டது " என்றார், அவர்.

குடியிருப்பு பகுதியில் இணக்க அலுவலகத்தை நிறுவி, குடிமக்களுக்கிடை முரண்பாட்டைத் தீர்ப்பது என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக Shi Jia Zhuang நகர் பெரிதும் வளர்த்து வரும் ஒரு அடிமட்ட ஒருங்கிணைப்பு வழிமுறையாகும். மேற்கூறிய Jian Ming குடியிருப்புப் பகுதியின் ஒருங்கிணைப்பு அலுவலகம், சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றது. அதிகப்படியான பணிகளின் மூலம் குடியிருப்புப் பகுதி இணக்க அலுவலகங்களின் பணியாளர்கள், அயலவர்களுக்கிடையிலான பல முரண்பாடுகளைத் தீர்த்துள்ளனர். குடியிருப்பு பகுதியின் குடிமக்கள் முழு மனநிறைவு அடைக்கின்றனர்.

1 2