• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-13 14:33:04    
மங்கோலிய இனத்தின் நாட்டுப்புறக் கலை

cri

சீனாவின் விசாலமான வடபகுதியில், கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் நாடோடி வாழ்க்கையை முக்கியமாகக் கொண்ட தேசிய இனமான மங்கோலிய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மங்கோலிய இனத்தின் வளர்ச்சி மேம்பாட்டில், ஒளிவீசும் மங்கோலிய இன பாரம்பரிய பண்பாடு உருவெடுத்தது. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில், "கதைப்பாடல் பெரியார் Maoyihan பிறந்த நூறாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் மற்றும் சீன உள்மங்கோலிய Ulger கலை விழா" உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் Tong Liao நகரத்தின் Zaruud மாவட்டத்தில் நடைபெற்றது. "Ulger ஊர்" என, இம்மாவட்டம் பாராட்டப்படுகின்றது. சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர் இந்த பண்பாட்டு வளமிக்க மாவட்டத்திற்குச் சென்று, "Ulger கலை விழாவை" நேரில் உணர்ந்து கொண்டார். 

மங்கோலிய இனம் வளர்ந்து வரும் வரலாற்றில், வாய்மூல பாரம்பரிய பண்பாடு மிகவும் செழிப்பானது. மங்கோலிய இனத்தின் வீரர் காவியம், வாய்மூலக் கதை ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக கலைஞர்கள் எங்கள் காலம் வரை பரவச் செய்துள்ளனர். அவற்றில் மங்கோலிய இனத்தின் புகழ் பெற்ற காவியமான "Jangar", திபெத் இனத்தின் காவியமான "Gesar", Khalkhas இனத்தின் காவியமான "Manas" ஆகியவை, சீனாவின் மூன்று முக்கிய காவியங்கள் என பாராட்டப்படுகின்றன. Huurin-Ulgerக்கு என்னப் பொருள்? மங்கோலிய இனக் காவியம் மற்றும் கதைக்கும் அதற்குமிடையில் என்ன தொடர்பு உண்டு?

கதைப்பாடல் பெரியார் Pajie

Ulger என்பது, Huurin-Ulger எனவும் கூறப்படுகின்றது. இதிலுள்ள Huurin, ஹன் இன மொழியில் "Hu Qin" எனப்படும் ஒரு வகை இசைக்கருவியாகும். "Ulger", கதை எனப்பொருட்படுகின்றது. "Huurin-Ulger" என்றால், Hu Qinஇன் பக்க இசையுடன் பாடப்படும் கதையாகும். Hu Qinஐக் கையில் பற்றி கதைபாடும் கலைஞர் "Hugurchi" என அழைக்கப்படுகின்றார். கடந்த மூன்று நூற்றாண்டுகளில், உள்மங்கோலியாவின் கிழக்குப் பகுதியில் புல்வெளியின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசத்தில் Ulger பரவியுள்ளது.

சீனச் சமூக அறிவியல் கழகத்தின் கீழுள்ள தேசிய இன இலக்கிய இயல் ஆய்வகத்தின் முனைவர் Siqin Batu பேசுகையில், Huurin-Ulger மங்கோலிய இன மொழியில் ஹன் இன புதினத்தைக் கதைபாடுவது, தனித்தன்மை வாய்ந்ததாகக் கூறினார். அவர் கூறியதாவது:

"Huurin-Ulger, புல்வெளி இசை, புல்வெளி காவியம், மத்திய சமவெளிகளின் பண்டைக்கால புதினங்கள், ஆகியவை தலைசிறந்த முறையில் ஒன்றிணைக்கப்பட்டதன் கனியாகும். சீனாவின் நாடோடி வாழ்க்கை முறையின் நாகரீகமும் வேளாண் வாழ்க்கை முறையின் நாகரீகமும் ஒன்றிணையும் போக்கில் தோன்றிய, வாய்மூல பண்பாடாகும்" என்றார்.

Hugurchi கலைஞர், மங்கோலிய இன மொழியில் பாடும் கதைகளில், மங்கோலிய இன கதையியலாளர்களும் கலைஞர்களும் இயற்றிய சீனாவின் பண்டைக்கால வரலாற்று பிரமுகர்கள் பற்றிய கர்ண கதைகளும், மங்கோலியாவின் பாரம்பரிய காவியங்கள் மற்றும் கர்ண கதைகளும் அடங்கும். அவற்றில், சீனாவின் கடந்த கால கர்ண கதைகளில், "மூன்று முடியரசு நாடுகளின் வரலாறு" "சதுப்பு நிலத்தில் ஒன்று திரளும் கிளர்ச்சி வீரர்கள்" முதலியவை இடம்பெறுகின்றன. "Geser சுயசரிதை" "Chinghis Khan சுய சரிதை" முதலியவை, மங்கோலிய இன காவியங்களில் அடங்கும். பூர்வாங்க புள்ளி விவரங்களின் படி, மக்களிடையே பாடப்படும் Ulgerஇன் எண்ணிக்கை, ஆயிரத்தை எட்டியுள்ளது.

1 2