• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-20 14:34:29    
சீனாவின் மங்கோலிய இனத்தின் Ulger கலை பற்றி

cri

Zaruud மாவட்டம், பிரபலமான Horchin பரந்த புல்வெளியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவின் பண்டைக்கால சிறுபான்மை தேசிய இனமான Dong Hu இனத்தவர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்செய்கையில் ஈடுபட்டனர். தேசிய இன பண்பாட்டுக் கலையின் தொட்டில் எனவும் இம்மாவட்டம் பாராட்டப்படுகின்றது.

Ulger கதைப் பாடல் கலை, Zaruud நாட்டுப்புறப்பாடல், Zaruud உட்செதுக்கு ஓவியம், மங்கோலிய இனச் சித்திரத்தையல் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மங்கோலிய இனத்தின் பாரம்பரிய பண்பாடு இங்கு தோன்றியது. அவற்றில், Ulger, பிரதிநிதித்துவத் தன்மைமிக்கது. Zaruudஇல், ஆண்கள், பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் அனைவரும் Ulger மீது பேரக்கறை காட்டியுள்ளதை எமது செய்தியாளர் கண்டுள்ளார். குறிப்பாக, நடுத்தரவாசிகளும் முதியோர்களும் Si Hu என்னும் இசைக்கருவியை இசைத்து, பாடுகின்றனர்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் Ulger கலை விழா Zaruud மாவட்டத்தில் நடைபெற்றது. Zaruud புல்வெளிப் பிரதேசத்தின் மிக முக்கிய விழா, இதுவாகும். ஆகஸ்ட் 4ம் நாள் முற்பகல் மலைப் பிரதேசத்தின் புல்வெளிச் சுற்றுலா மண்டலத்தில் துவங்கிய இக்கலை விழாவில் சீனக் கதைப்பாடல் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் Liu Lan Fangஉம் கலை இலக்கிய வட்டாரத்தின் நண்பர்களும் அழைப்பின் பேரில் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் பேசுகையில், "Zaruud மாவட்டம், இந்த நினைவு நடவடிக்கையை வாய்ப்பாகக் கொண்டு மாவட்டக் கட்சிக் கமிட்டி மற்றும் மாவட்ட மக்கள் அரசின் தலைமையில், தேசிய இனப் பண்பாட்டு மரபுச் செல்வத்தை கண்டறிந்து கையேற்ற வேண்டும்" என்றார். தேசிய இனக் கதைப் பாடலைப் பெரிதும் வளர்த்து, Ulger, Holboo உள்ளிட்ட பாரம்பரிய கதைப் பாடல் கலை, தலைமுறை தலைமுறையாக தொடரச் செய்ய வேண்டும் என்று Liu Lan Fang கூறினார்.

"Zaruudக்கு வருகை" என்னும் பெரிய ரகக் கலை அரங்கேற்றம், தலைவர்களின் வாழ்த்துரையுடன் துவங்கியது. உள்மங்கோலியாவின் புகழ் பெற்ற கலைஞர்களான Altai, Qi Feng, Maxi ஆகியோரும் உள்ளூர் Ulan Muqi இன் நடிகரும், நடிகைகளும் ரசிகர்களுக்கு தரமான அரங்கேற்றத்தை அளித்தனர். இது, புல்வெளியில் வாழும் மங்கோலிய இன மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. இந்த அரங்கேற்றம், மக்களின் ஆரவாரமான கரவொலியைப் பெற்றுள்ளது.

துவக்க விழாவில், Ulger போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் கலைஞர்கள் பலரை எமது செய்தியாளர்கள் பேட்டிக் கண்டனர். "நான் முதன்முறை Zaruud மாவட்டத்துக்கு வருகை தந்தேன். இவ்விடம் தேசிய இன நடையுடை பாவனைமிக்கது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் போது, நானே இயற்றிய 'மதுபானத்தில் மூழ்கியவரின் Holboo'ஐ பாடுவேன்" என்று அவர்களில் ஒருவர் கூறினார். உடனே அவர் சில வரிகளைப் பாடினார்.

1 2